காலையில் அகில் என்னுடன் ஏதோ பேசும் போது ஒருமையில் பேசிக்கொண்டு இருந்தான். நானும் அதை கரெக்ட் செய்வதில்லை, குழந்தை என்னை வா போ என்று பேசாமல் யாரை சொல்லப்போகிறான் என்று கண்டு கொள்ளாமல் விட்டு விடுவேன்.  என் அம்மா அதை எப்போதும் சொல்லி புலம்புவதும் வழக்கம், உன்னை சொல்லுகிற பழக்கம் தான் பின்னாளிலும் வரும், எல்லாரையும் அதைபோலவே மரியாதையில்லாமல் பேசும் பழக்கம் வந்துவிடும் என்பது அவர்கள் வாதம்.

இன்று அம்மா அதையே சொல்லி, அகிலிடமும் என்னிடமும் “இனி நீங்க வாங்க போங்க என்று தான் சொல்லனும். அவன் சொல்லலை என்றால் நீதான் சொல்லி கொடுக்கனும், திருத்தனும்” என்று சொன்னார்கள். ஓரிரு நிமிடம் கழித்து அகில் நான் இருந்த அறைக்கு வந்து சொன்னது… “நீங்க வாங்க போங்க, நீங்க வாங்க போங்க”

ஜெயா.