நேற்று இரவு நாங்கள் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டு இருந்த போது, அகில் ஏதோ சமையலறையில் உருட்டிக்கொண்டு இருந்த சத்தம் கேட்டது. என் அம்மா உடனே “அகில் ஓடி வந்திடு, கிச்சனில எலி இருக்கு….” என்று சொல்லிக் கொண்டே “மியாவ் மியாவ்” என்று சத்தம் போட்டார்கள்.  நான் “எந்த ஊர்ல அம்மா எலி வந்து மியாவ் என்று கத்துது?” என்று கேலி செய்து கொண்டு இருந்தேன்.

அகில் சமைலறையில் இருந்து வெளியே வந்து என் அம்மாவை பார்த்து கத்தியது “லொள் லொள்”

ஜெயா.