கடற்கரை அருகில் இருப்பதால் நினைத்த நேரத்திற்க்கு போய் விளையாட மிகவும் வசதி.  ஒரு  நாள் விட்டு ஒரு நாளாவது கடற்க்கரைக்கு செல்லுவது வழக்கம். சில நாட்கள் மண்ணில் தோட்ட செட் கொண்டு விளையாடுவதோடு சரி, பல நாட்கள்  அலைகளிலும் விளையாடுவதும் உண்டு.

முந்திய நாள், அகில் அலைகடலில் விளையாடிக் கொண்டு இருந்த போது, ஒரு பெரிய அலை எதிர் பாராமல் வந்து முகத்தில் அடித்து செல்ல, சற்று தடுமாறி கிழே விழுந்த குழந்தை மீண்டும் எழுந்து விளையாட துவங்கும் போது அவன் பெரியம்மா, “என்ன ஆச்சு அகில்” என்று கேட்டால் டாண்ணென்று வருகிறது பதில், “ஒன்னும் இல்லை பெரியம்மா, சின்ன accident தான்… இப்போ சரியாகிடுச்சு.”

ஜெயா.