thottaal thulangum…

7 Comments

நேற்று சாயங்காலம் டி.வியில் ஓடிக்கொண்டு இருந்த தாம் தூம் படத்தை பார்த்துக் கொண்டே துணி மடித்து வைத்துக் கொண்டு இருந்தேன். ஏழு மணிக்கு வேறு ஒரு சேனலில் ஜோதாஅக்பர் படம் என்று விளம்பரம் பார்த்து அதை வேறு பார்க்கவேண்டும் என்று வெங்கட் ரொம்ப ஆர்வமாக இருந்தார், நானும் தான், ஹிரித்திக் ரோஷனையும் ஐஷ்வர்யாராயையும் எத்தனை தரம் பார்த்து ஜொள்ளு விட்டாலும் திருப்தியாகுமா என்ன?

ஆறு மணி வாக்கில் டமால் என்று ஒரு சத்தம் – அகில் அவன் பொம்மை போனை எடுக்கிறேன் பேர்வழி என, செட்டாப் பாக்ஸை தள்ளிவிட்டான் கீழே. விழுந்த அடுத்த நிமிடம் டிவியில் படம் வரவில்லை. கார்ட் இன்சர்ட் செய்யுங்கள் என ஒரே செய்தி திரும்ப திரும்ப எந்த சேனலை வைத்தாலும் வந்து கொண்டே இருந்தது… வெங்கட் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டு இருந்தது, அய்யோ பார்க்க நினைத்த படத்தை கடைசியில் பார்க்கமுடியாமல் போய்விடுமோ என்று அல்லாட்டம் வேறு. என்னன்னவோ  செய்து பார்த்துக் கொண்டு இருந்தார், ரிமோட்டை சரி செய்தார், வைர் கனெக்ஷென் எல்லாம் சரி பார்த்தார், அப்போதும் படம் வந்த பாடில்லை… கடைசியில் ச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற உணர்ச்சியுடன் நோண்டுதலை விட்டு போய் அமர்ந்து கொண்டார்.

சரி நம் திறமையை சோதித்து பார்க்கலாம், என்று நான் சென்று ஒரு முறை கனெக்ஷென் சரி பார்த்துவிட்டு, செட்டாப் பாக்ஸை தலை கீழாக திருப்பினேன், என்ன மாயமோ, படம் திரும்ப வந்து விட்டது. என் பெருமையை கேட்க வேண்டுமோ, நேராக வெங்கடிடம் போய் நின்று, “தொட்டால் துலங்கிற கை இது… சொன்னால் நம்ப மாட்டீர்கள், இப்போதாவது பார்த்து என் பெருமையை தெரிந்து கொள்ளுங்கள். கையை கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்க” என்று ஸ்டைலாக டையலாக் விட்டு ஒற்றிக் கொள்ள வைத்தால் தப்பா என்ன?

ஜெயா.

Advertisements

latest remix song

5 Comments

ஆசை படத்தில் ஒரு பாடல் வரும், “மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே…” என்று. நானும் அகிலும் எங்க அம்மாவை குஷி படுத்த முதல் வார்த்தையை மட்டும் மாற்றி, “அம்மம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே…” என்று பாடிக் கொண்டு இருப்போம்.

நேற்று மாலை அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டு இருந்த போது, அகில் பாடியது – “விதுலா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே…” என்று. விதுலா நாங்கள் வேளச்சேரியில் இருந்த போது எங்கள் ஃப்ளாட்டிற்க்கு எதிர்த்த ப்ளாட்டில் இருந்த குட்டிப் பெண், அகிலின் முதல் தோழி, அவனை விட இரண்டு மாதமே பெரியவள். வெங்கட் ஆடிப்போய் விட்டார் அகில் பாட்டை கேட்டு, என்ன ஜெயா, இவன் வாரணமாயிரம் சூர்யா போல கிடாரோடுதான் தெருத் தெருவாக சுற்றுவான் போல இருக்கிறதே என்று அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார்.

ஏதோ நல்லா இருந்தா சரி 🙂

ஜெயா.

New Word

2 Comments

I was calling akhil trying to locate him,

Me:  “Akhil where are you?”

Akhil: ” I am ulside the car amma”

Hei, didn’t you know that, ulle and side become ULSide – meaning inside?

Jaya.

Advertisements

Policekaarar Vadivel

2 Comments

அகிலும் நானும் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டு இருக்கும் போது, வடிவேல் போலிஸாக நடிக்கும் காட்சி வந்தது, அகில் ப்டு மும்மரமாக என்னிடம்:

“அம்மா அம்மா, வடிவேல் போலிஸாகிட்டாரு பாரேன்…” என்றது. அடப்பாவி அவர் என்ன படிச்சா போலிஸ்காரர் ஆனார் என்று நினைத்துக் கொண்டாலும், வெளியே விளக்கி சொல்ல முடியாமல், “ஆமாம் அகில்” என்று தலையை ஆட்டி வைத்தேன்..

ஜெயா.

Advertisements

sarukku without maram

2 Comments

அகிலிடம் அவன் அப்பா ஒரு பூங்காவினை தாண்டி செல்லும் போது,

“ஹேய் அகில் அங்கே பாரேன், சறுக்கு மரம்.”

அகில் உடனே நக்கலாக, “அப்பா அந்த பார்க்ல மரமே இல்லையே, வெறும் சறுக்கு தான் இருக்கு…”

அவன் அப்பா: ?!!?#!!

ஜெயா.

Advertisements

Anna Univ – The place to be…

3 Comments

நானும் அகிலும் கிண்டியை தாண்டி பேருந்தில் சென்று கொண்டு இருந்த போது, அண்ணா பல்கலைகழகத்தை காண்பித்து,

நான்: அகில் அதுதான், அண்ணா யுனிவர்சிட்டி, நீ அதில படிக்கறயா?

அகில்: அதில சின்ன பசங்க எல்லாம் படிக்கலாமா?

நான்: இல்லைமா, பெரிய பசங்க தான் அதில் படிக்க முடியும்… பெரியவனான பிறகு தான் சொல்லறேன்…

அகில்: அப்போ நீ அதில படியேன் அம்மா?

நான்: (அடப்பாவி, என்னால பண்ண முடியாததை தானே உன்னை பண்ண சொல்லறேன்…) அம்மா ஏற்க்கனவே படிச்சு முடிச்சுட்டேனே, படிச்சுட்டு தான் ஆபிஸ்ல வேலை செய்யறேன்… (அப்பா இப்போதைக்கு தப்பிச்சுட்டேன்…)

அகில்: ஓ சரி அம்மா.

ஜெயா.

Advertisements

Phone Conversation

Leave a comment

தொலைபேசியில் அலுவலகத்தில் இருந்து நான்: ஹெல்லோ

அகில்: ஹெல்லோ…

நான்: நாந்தான் அம்மா பேசறேன் அகில்

நன்றாக காதில் வாங்கிக் கொண்டு: யாரு?

நான்: அம்மா அகில்..

அகில்: யாரு பேசறது?

நான்: அகில், அம்மாடா

அகில்: யாரு அப்பாவா?

நான்: டேய், அம்மா பேசறேன்டா..

பின்னால் இருந்து வெங்கட், “யாருடா போன்ல? என்ன சொல்லறாங்க?”, நானோ மனதுள், அடப்பாவி அப்பா வீட்டில தான் இருக்காரா?

அகில்: சொல்லு அம்மா, என்ன சொல்லனும்?

வேறு யார்கிட்டேயும் பேச விடாமல் அதுவே என்னை ராகிங் செய்து தான் மட்டுமே பேசி போனை கீழே வைத்துவிட்ட கதையை வேறு சொல்லவேண்டுமா?

ஜெயா.

Advertisements

Older Entries