ஒரு நாள் சாயங்காலம் அகில் அவன் அப்பாவுடன் விளையாடிக்கொண்டு இருந்தான். அகில் ஒரு ஜெம்ஸ் பாக்கெட் ஒன்றை வைத்துக் கொண்டு, அவன் அப்பாவிடம், “உங்களுக்கு ஒன் வேண்டுமா, இல்லை டூ வேண்டுமா” என்று கேட்டது.

அவன் அப்பா டூ என்றதும், முதலில் ஒன்றை எடுத்துக் கொடுத்தது. அப்புறம், இரண்டை எடுத்து கொடுத்தது. வெங்கட்டிற்க்கு கொஞ்ச நேரம் கழித்துத்தான் புரிந்தது – டூ என்றால் இரண்டு அல்ல, இரண்டு தரம் என்று. அதுவும் முதல் முறை ஒன்று, இரண்டாம் முறை இரண்டு…

யாரோ அங்கே என்னுடைய கணித திறமையை பற்றி முனுமுனுப்பது காதில் விழுகிறது…. ஷ்.. பப்ளிக், பப்ளிக்…

ஜெயா.