லீவ் விட்ட நாளிலிருந்து காலையில் எழுந்தவுடனே அகில் கேட்கும் நான்கு கேள்விகள்:
1. அம்மா, உனக்கு ஆபீஸ் இருக்கா?
2. அப்பாவிற்க்கு?
3. பெரியம்மாவிற்க்கு இருக்கா?
4. எனக்கு ஸ்கூல் இருக்கா?
அம்மம்மாவிற்கு இருக்கா? என்று கேட்டது ஒரு நாள்… நான் பதி்லுக்கு, அம்மம்மா என்னைக்குடா ஆபீஸ் போய் இருக்காங்க என்று கேட்டேன்,
அலட்டிக் கொள்ளாமல் வந்தது பதில்: அம்மம்மாவிற்க்கு வீடுதாம்மா ஆபீஸ் என்று.
ஜெயா.
Leave a Reply