நான் மற்றும் அகில் என்னுடைய நண்பரின் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தோம். லேசாக தூரல் வந்தவுடனேயே அகில் கண்ணாடியின் வைப்பரை போட சொல்லி அடம் பண்ணிக் கொண்டு இருந்தது. அதை நிறுத்துவதற்க்காக என்னுடைய நண்பர், “டேய் அதை எல்லாம் சும்மா போட கூடாதுடா, ஒரு தரம் போட்டாலே பெட்ரோல் காலியாகி விடும், அப்புறம் நாம எப்படி போறது? அதனால அதை போட வேண்டாம் என்று சமாதானம் சொன்னவுடன், யோசனையுடன் அகில் சரி என்று சொல்லி விட்டான். அப்புறம் கேட்டு தொந்தரவு செய்யவில்லை…

ஒரு பத்து நிமிஷம் கழித்து, நல்ல மழை வரவே, வேறு வழியில்லாமல் வைப்பரை போட வேண்டிய நிலைமை வர, “சரி டா அகில் இப்போ வைப்பரை போடலாம்” என்று சொல்ல, அடுத்த நொடி அகில் கேட்டது…

“இப்போ போட்டா கூட பெட்ரோல் காலியாகிடுமே, மழை வேற வருதே, கார் நின்னு போச்சு என்றால் என்ன பண்றது?”

ஆடிப்போன நண்பர் ஒரு சப்பை சமாதானம் சொல்லி வழிந்த்தை சொல்லவும் வேண்டுமோ?

ஜெயா.