வீட்டுக்கு இன்னொரு குழந்தை வரப்போகிறது என்று எப்படி அகிலுக்கு எடுத்து சொல்லுவது , கொஞ்ச நாட்களாக யோசித்துக் கொண்டு இருந்தோம், என்னைவிட வெங்கட்தான் இந்த விஷயத்தில் ரொம்ப டென்ஷனாக இருந்தார். அது வேற ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்குமே, எப்படி பதில் சொல்லுவது என்ற பயம் வேறு. நான் இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும் வெங்கட் என்று சொல்லிக்கொண்டு இருந்தேன்.
ஒருநாள் என்ன யோசித்தாரோ, “இன்றைக்கு நான் சொல்லியே தீரப்போகிறேன்…” என்று விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையிடம் போய், “அகில் உனக்கு தெரியுமா, நம்ம வீட்டுக்கு ஒரு புது பாப்பா வரப்போகுது…” என்று சொன்னார்.
அகில் உடனே கேட்டது, “எப்படிப்பா வரும் புது பாப்பா ?”
மனுஷர் பிரஷர் அந்த ஒரு கேள்வியிலேயே எகிறி விட்டது. இது என்ன புது டாய் யா என்று பேச்சை மாற்றி அப்புறமாவே சொல்லிக்கலாம் என்று எஸ்கேப் ஆகிவிட்டார்.
ஜெயா.
Jul 12, 2009 @ 18:37:32
//மனுஷர் பிரஷர் அந்த ஒரு கேள்வியிலேயே எகிறி விட்டது. இது என்ன புது டாய் யா என்று பேச்சை மாற்றி அப்புறமாவே சொல்லிக்கலாம் என்று எஸ்கேப் ஆகிவிட்டார்.//
ஜெயா சிரிச்சு சிரிச்சு சேர்ல இருந்து கீழ விழுந்திருப்பேன் .பக்கத்துல இருக்கிறவனுங்க எல்லாம் ஒரு மாதிரி பார்க்கிறானுங்க.
அகிலு கலக்கறடா கண்ணா.
Jul 16, 2009 @ 10:25:24
இதெல்லாம் அகில் கூட இருக்கும் போது சகஜம் நந்தா…
ஜெயா.