கொஞ்ச நாளாகவே, குறிப்பாக ப்ரி.கே.ஜி யில் இருந்து எல்.கே.ஜி சென்றதில் இருந்து, அகில் எங்களை எல்லாம் வீட்டில் பேசும் போது, “நான் பெரிய பையன் ஆகிட்டேன். என்னை போடா வாடா என்று சொல்லாதீங்க… அகில் அண்ணான்னு கூப்பிடுங்க” என்று அதட்டிக் கொண்டு இருந்தது… பள்ளியில் அவன் ஆன்டி சொல்லியிருந்திருக்க வேண்டும் என்று நினைக்கறேன், நீங்க எல்லாம் பெரிய பசங்களாகிவிட்டீங்க என்று.

ஒரு நாள் காலையில், நான் அகிலிடம், “அகில், நம்ம வீட்டுக்கு ஒரு புது பாப்பா வரப்போகுது அகில், அதுக்கு  வந்து ஒன்னுமே தெரியாது… நீதான் எல்லாம் சொல்லிக் கொடுக்கனும். அகில் அண்ணா அகில் அண்ணா என்று உன்னையே தான் சுற்றி வரும், அதோட சொப்பு சாமான் எல்லாம் உன்னோட ஷேர் பண்ணிக்கும், நீ சொல்லறது எல்லாம் பண்ணும். அது மாதிரி ஒரு பாப்பா இருந்தா எப்படி இருக்கும்” எனறேன். சொல்ல சொல்ல அகில் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல பிரஹாசம் ஏறிக்கொண்டே வந்தது…

“என் டாய்ஸ் எல்லாம் கேட்குமா” அடப்பாவி என்ன ஒரு சந்தேகம்?

“அது எல்லாம் கேட்கவே கேட்காது, நீயா குடுத்தா வாங்கிக்கும்…”

“எப்போ வரும்”

“இன்னும் ரொம்ப நாள் இருக்கு, 5 மாசம் கழிச்சு தான் வரும்…”

“எப்படி வரும்”

“நாம டாக்டர் வீட்டுக்கு போயிடனும், அங்கே டாக்டர் ஒரு கத்தி வைச்சு அம்மா வயிறு கட் பண்ணி உள்ளே இருந்து ஒரு பாப்பவை எடுத்து அகில் கையில குடுத்துடுவாங்க… திரும்ப டாக்டர் வயிறு தைச்சு அனுப்பிடுவாங்க… நாம பாப்பாவை தூக்கிட்டு வீட்டுக்கு வந்துடனும்… ”

“ஒ.. சரிம்மா”

அப்பாடி, எப்படிடா அகிலை பிர்ப்பேர் பண்ணறது என்று யோசித்துக் கொண்டு இருந்ததற்க்கு ஒரு நல்ல ஆரம்பம் கொடுத்தாயிற்று. அடுத்தது வந்து என்ன அழிச்சாட்டியம் செய்ய போகுதோ தெரியவில்லை… சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்: cross the bridge when it comes என்று…

ஜெயா.