அகிலிடம் ஒரு நாள் நான், “டேய், நம்ம வீட்டுக்கு ஒரு புது பாப்பா வரப் போகுதே, அதுக்கு என்னடா பெயர் வைக்கலாம்” என்று கேட்டேன்.

டக்கென்று பதில் “லக்ஷ்மி பிரியா என்று வைச்சுடலாம்மா…”

அடப்பாவி, லக்ஷ்மிபிரியா அவனோடு படிக்கிற ஒரு குட்டி பெண்ணுடைய பெயர்… சரிதான் போ.

“அகில் மாதிரி பாய் யா இருந்தா?”

“அகில் என்றே வைச்சுடலாம் அம்மா”

“இரண்டு பேருக்கும் எப்படிடா அகில் என்று பேர் வைக்க முடியும்? எப்படிக் கூப்பிடறது?”

“அகில் என்றே கூப்பிடலாம்…”

“அகில் 1, அகில் 2 என்று வைச்சுடலாமா? அகில் 1 என்றால் நீ வரணும், அகில் 2 என்றால் குட்டி பாப்பா வரணும்..”

சிரித்துக் கொண்டே, “சரி அம்மா.. அப்படியே வச்சுடலாம்…”

ஜெயா.