எப்போதும் தூங்குவதற்க்கு முன் அகிலுக்கு ஏதாவது கதை சொல்லுவது வழக்கம். குட்டி குழந்தைகள் கதைகள், ஏதாவது தேவதை கதைகள், சொந்த கதை சோகக்கதை என அடித்துவிடுவது உண்டு.
ஒரு நாள் நான் அகில் தூங்கும் போது வீட்டில் இல்லை – ஆகவே எனது அம்மாவிடம் “அம்மம்மா, கதை சொல்லுங்க” என்று சொல்லி இருக்கிறான். அம்மம்மாவோ “எனக்கு கதை எல்லாம் தெரியாதுடா, அம்மாவிற்க்குத்தான் தெரியும்” என்று கூற “இல்லம்மா, நரி கதை சொல்லுங்க” என்று அடம் பிடித்து இருக்கின்றான்.
அம்மம்மா – “நரியும் திராட்சை பழமும் வருமே அந்த கதையா?”
அகில் – ” இல்லம்மா, ஒரு காட்டில ஒரு நரி இருக்கும், அதுக்கு ராஜாவாகனும் என்று ரொம்ப ஆசையா இருக்கும், ஆனா யாரும் ஒத்துக்க மாட்டாங்க, அப்புறம் அது ஒரு ஊருக்கு போகும், நீல கலர் சாயக்குட்டையில விழுந்திரும், ஃபுல்லா நீலக்கலர் ஆகிடும், திரும்ப வந்தா எல்லாரும் அதை பார்த்து பயந்து அதுதான் ராஜா என்று சொல்லிடுவாஙக, அப்புறம் ஒரு நாள் மழை பெய்யும், சாயம் போயிடும், அப்போ எல்லா அனிமல்ஸும் அதை திரத்தி விட்டுடுவாஙக இல்ல, அந்த கதை… ”
அம்மம்மா – ” நீயே சொல்லிட்டியே அகில், அதுதான் கதை…”
அகில் – “இப்போ நீங்க சொல்லுங்கம்மா அந்த கதையை.. அது தான் நரிகதை..”
அம்மம்மா – ????
ஜெயா.
Leave a Reply