அகிலும் நானும் சென்ற வாரம் சிட்டி சென்டர் சென்ற போது அங்கே டிஸ்ப்ளெயில் டோராவின் கிச்சன் செட் விற்பனையில் இருந்தது… விலை நான்காயிரத்து ஐநூற்றுச் சொச்சம்.. அகில் அதை பார்த்து, “நாம இதை வாங்கலாமா அம்மா?” என்று கேட்டது. நான் விலையை பார்த்து அரண்டு விட்டு, “வேண்டாம் அகில், அது ரொம்ப விலை ஜாஸ்தி… ஆயிரம் ரூபாய் என்றால் கூட பரவாயில்லை, இது நான்காயிரம், நம்மால வாங்க முடியாது…” என்று கூறிவிட்டேன்.

நல்லவேளையாக அழுது அடம் பிடிக்காமல் பதில் சொன்னான் – “நீ ஆபிஸ்க்கு போய் போய், நான் ஸ்கூலுக்கு போய் போய், காசு சேர்த்து, உண்டியலில் போட்டு வைத்து அப்புறம் வாங்கலாம் அம்மா…”

அடேய், நீ ஸ்கூலுக்கு போவதற்க்கு எதுக்குடா ஸ்கூல் உனக்கு காசு கொடுக்க போகுது, நாந்தான்டா பணம் கட்டறேன்…

ஜெயா.