நானும் அகிலும் ஒரு நாள் காலையில் உக்கார்ந்து புது குழந்தையின் வரவை பற்றி பேசிக் கொண்டு இருந்தோம்…

“அகில், புது பாப்பாவிற்க்கு ஒன்னுமே தெரியாது… சும்மாவே படுத்து இருக்கும், அப்புறமா தான் சிரிக்கும், கத்தும், விளையாடும்… ரொம்ப நாள் கழித்துதான் பேசும்.. சின்னதா வேற இருக்கும். ”

அமைதியாக கேட்டு ஜீரணித்துக் கொண்டு இருந்தது… நடுவில் :

“அம்மா நம்ம வீடு ஃபுல்லா பாப்பாவா இருந்தா எப்படி இருக்கும்…”

“அடேய், ரெண்டு குழந்தையே நம்ம வீட்டுக்கு ஜாஸ்தி டா.. நிறைய பேபிஸ் இருந்தா எங்கே இடம் இருக்கு வைச்சு பாத்துக்கறத்துக்கு?”

“ஷெல்ஃப் ல எல்லாம் வைச்சுக்கலாம் மா… நல்லா இருக்கும் அம்மா”

“நிறைய பேபிஸ் இருந்தா நாம் ஹெட்ஸ்டார்ட் போல ஸ்கூல் தான்டா வைக்கனும்… ஸ்கூல்ல எல்லாம் தான் நிறைய பேபிஸ் இருப்பாங்க… வீட்டுக்குள்ள கொஞ்சம் குழந்தைகள்தான் இருப்பாங்க… ”

“நாமளும் ஒரு ஸ்கூல் திறந்திடலாம்… அம்மா ஜாலியா இருக்கும்”

“சரிதான் அகில் பார்க்கலாம்”

அப்புறம் ஒரு நிமிஷம் யோசிக்கும் போது, நம்முடைய அப்பா அம்மாவுட கூட பிறந்தவர்கள் கண்டிப்பாக நாலு அல்லது ஐந்து பேராவது இருப்பார்கள். என்னுடைய மாமாவுடன் பிறந்தவர்கள் – 9 பேர் – கண்டிப்பாக அவருடைய வீடு ஒரு மினி ஸ்கூல் மாதிரிதான் இருந்திருக்க வேண்டும். அதற்க்கு முந்தைய ஜெனரேஷனில் எப்படியும் வருஷத்திற்க்கு ஒரு பிள்ளை பெற்று போட்டுஇருப்பார்கள். இப்போதோ – ஒரே குழந்தை, அதிகபட்சம் இரண்டு – மூன்று குழந்தைகள் இருக்கின்ற வீட்டை இன்னும் நான் பார்க்கவில்லை…. பார்ப்போம அகில் தலைமுறையில் என்ன நடக்கிறது என்று – இரண்டு வீட்டுக்கு ஒரு குழந்தை என்று ஒரு புது திட்டம் வந்திருந்தாலும்ம் ஆச்சர்யப்டுவதிற்க்கில்லை…

அப்போதிலிருந்து – அகில் அவ்வப்போது “அம்மா நம்ம வீடு ஃபுல்லா பேபிஸ் இருந்தா எப்படி இருக்கும்?” என்று கேட்டு விஷமமாக சிரிக்க கற்றுக் கொண்டு உள்ளது 🙂

ஜெயா.