அன்று ஒருநாள் அகில் ஒரே அழுகை … ஏதோ ஒரு சாக்கலேட் உடனே வேண்டும் என்று, நானும் சொல்லிப் பார்த்தேன், இல்லை அகில் முடியாது, லேட் ஆகிடுச்சு, யாரும் இப்போ கடைக்கு போக முடியாது, நாளைக்கு வாங்கித்தரேன் என்று, ஆனாலும் கேட்காமல் அழுது கொண்டு இருந்தது, நானும் சரி அகில்  அந்த ரூமில் போய் அழு என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட்டேன். அவனுக்கே நன்றாக தெரியும், அழுதால் எதுவும் கிடைக்காது என்று, இருந்தாலும் ஓவராக சீன் போட்டுக் கொண்டு இருந்தது. அப்புறம் அதுவே சமாதானம் ஆகிவிட்டது.

தூங்க வைக்கும் போது, நான் அகிலிடம் மெதுவாக அழக்கூடாது என்று சொல்லவேண்டும் எனஆரம்பித்தேன், திடிரென்று “அகில் அம்மா இப்போ என்ன சொல்லப் போகிறேன் என்று தெரியுமா?” என்று கேட்டேன்.

அதற்க்கு ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் வந்தது பதில் – “அழுவ கூடாது என்று சொல்லப் போற… அழுதா எதுவும் வாங்கித்தர மாட்டேன். இனிமேல அழுவக் கூடாதுன்னு சொல்லப் போறே அம்மா ”

அடப்பாவி தெரிந்து கொண்டே அழுகிற உன்னை என்ன சொல்லுவது?

ஜெயா.