ஒரு நாள் ராத்திரி ஏதோ ஒரு சாக்கலேட் வாங்கிக் கொண்டு சென்றிருந்தேன். அகில் கையில் கொடுத்து விட்டு  “சாப்பிட்டு விட்டு ஒரேயடியாக பல் தேய்த்து விடு அகில், போய் படுத்து விடலாம்…”  என்று சொன்னேன்.  அதற்க்கு அகில் – ” இல்லம்மா பல் தேய்த்துவிட்டுதான் சாப்பிடனும் அம்மா…”

“இல்லப்பா அது காலையில… ராத்திரியில எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு அப்புறம் பல் தேய்க்கனும். தேய்ச்ச பிறகு ஒன்னும் சாப்பிடக்கூடாது… காலையில பல்லை தேய்த்துவிட்டுத்தான் எதுவும் சாப்பிடனும்..”

“இல்லம்மா… பல்லை தேய்ச்சுட்டுத்தான் சாப்பிடனும் இல்லன்னா ஜெர்ம்ஸ் எல்லாம் வந்துடும்… ராத்திரி காலையில எல்லாம் ஒன்னும் கிடையாது, பல்லை தேய்ச்சுட்டுத்தான் சாப்பிடனும்.  சாப்பிட்டுவிட்டு பல்லை தேய்க்க கூடாது… ”

லாஜிக்காத்தான் பேசறான்… ஆனாலும்…

ஜெயா.