அகில் வயிற்றில் இருந்த போது எனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தவர்கள் பலர். அதிலும் நாங்கள் இருந்த இயக்கத்தின் அனைவருக்கும் எப்படித்தான் கனவில் பட்டு பாவாடை அணிந்த பெண் குழந்தையே வந்ததோ என்று தெரியவில்லை. நானும் குழந்தையோடு பேசுவது மற்றும் கற்பனை செயவது அனைத்திலும் பெண்ணைத்தான் உருவகபடுத்தி இருந்தேன். கடைசியில் ஆபரேஷன் முடிந்து வெளியே வந்த போது வெங்கட் – ஜெயா நம்ககு பையன் பிறந்து இருக்கிறான் என்று சொன்ன போது, என்னால் நம்பவே முடியவில்லை – இரண்டு தரம் கேட்டேன் அப்படியா என்று… ஏன் பிறந்தாய் மகனே என்று பாட்டு பாடும் அளவிற்க்கு வருத்தம் இல்லை என்றாலும், ஏமாற்றமாகத்தான் இருந்தது. அதன் பிறகு ஒன்றும் தெரியவில்லை, அந்த பில்ட அப் இல்லை என்றால் எனக்கு சுத்தமாக் ஒன்றும் தெரிந்து இருக்காது.

இப்போது பிறக்க போவதாவது பெண்ணாக இருக்காதா என்ற ஆசை மிகவும் அதிகமாக இருக்கின்றது. முதல் குழந்தை பெண்ணாக பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்று நினைக்கிறேன், அவர்களுக்கு அடுத்தது எதுவாக இருந்தாலும் டென்ஷன் அதிகமாக இருக்காது. இரண்டு பெண்கண் என்றாலும் இன்னும் ஆசையாகத்தானே இருக்கும். என்னுடைய ஃப்ரண்ட்ஸ் நிறைய பேருக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது, என்ன ஒரு அதிர்ஷடம். எப்படி என்றாலும் பெண் குழந்தை பெற்றவர்களிடம் அன்பாக இருப்பதில் இருந்து, புரிந்து நடந்து கொள்ளுவது எல்லாவற்றிலும் ஒரு படி மேல் என்பது என் எண்ணம். ஆனால் காலம் போகிற போக்கை பார்த்தால் எதையும் உறுதியாக சொல்ல முடியாது போலதான் இருக்கின்றது.

இப்போது அகில் மட்டும் எங்கள் வீட்டு ராஜாக்குட்டியாக இருக்கின்றது – இன்னொரு ஆண் குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இரண்டு ஆண்களாக வளர்ந்தவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும், என் கிரிக்கெட் பேட்கள், உன் கிரிக்கெட் பேட், இரண்டு விளையாட்டு சேனல்கள் என்று வீடு அமளிப்படும் என்று நினைக்கிறேன், ஒரே கெர்ள் ஃப்ரண்டுக்கு இரண்டு பேரும் அடித்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.

பிறக்க போவது பெண்ணாக இருந்தால் அகிலுக்கு வீட்டிலே ஒரு பெண் இருந்தால் எப்படி இருக்கும் என்று தெரியும். பெரிய பையன் ஆனப்பிறகு வேறு பெண்களை பார்த்தால் கூட, காணாததை கண்ட ஃப்லீங் இருக்காது என்று நினைக்கிறேன், இதைப் போன்ற ஒன்றுதான் நம்ம வீட்டிலேயே இருக்கின்றதே, எல்லாம் ஒரே குட்டைதான் என்ற ரியலைஷேஷன் சீக்கிரமே வரலாம். இரண்டும் ஆண்களாக இருந்தால் பின்னர் பெண்களை பார்த்து பேசுவதற்க்கு கூட தொடை நடுங்கிகளாக வளரும் வாய்ப்பும் இருக்கும்… இன்னொரு பாசிபிளிட்டியும் இருக்கும் – தங்கையின் ஃப்ரண்ட்ஸ் இவனுக்கும் ஃப்ரண்ட்ஸ் ஆகி பின்னர் ஏதாவது சுவாரஸ்யமாக நடக்கலாம்…

வெங்கட் வீட்டில் மூன்றும் ஆண் குழந்தைகள் – எங்கள் வீட்டில் இரண்டும் பெண் குழந்தைகள். முதல் முறை வெங்கட் வீட்டு பரம்பரை ஜீன்ஸ் ஜெயித்தாலும், இரண்டாவதாவது எங்கள் வீட்டு ஜீன்ஸ் ஜெயிக்க கூடாதா?

ஒரு ஆண், ஒரு பெண் பெற்றவர்கள் – மிகவும் பாக்கியசாலிகள் – பெரிஃப்க்ட் பேலன்ஸ்

இரண்டு பெண் குழந்தைகள் – என் பார்வையில் மிகவும் பாக்கியசாலிகள் தான், ஆனால் அவர்கள் அப்படி நினைக்காமலும் இருக்கலாம்.

இரண்டு ஆண் குழந்தைகள் – ம்ம்ம்ம் என்ன சொல்லுவது… அந்தமாதிரி ஒரு நிலைமை வராமல் இருக்க கூடாதா…

ஸ்கேன் செய்யும் போது கேட்க தொண்டைவரை கேள்வி வந்தாலும் கேட்பதில்லை. எப்படியும் நடக்க போவது நடந்துதான் தீர போகிறது, முன்னாடியே மட்டும் தெரிந்து கொள்ளுவதால் என்ன பயன்? அதுவும் இல்லாமல் அந்த நிமிட சஸ்பென்ஸ் அப்போது உடைந்தாலே நன்றாக இருக்கும்.

கடைசி ஆப்ஷனாக ஏதாவது குழந்தை மாற்றம் செய்தாவது – பெண் குழந்தையாக்கி விட வேண்டும் என்று இருக்கின்றது…. பார்ப்போம் இரண்டாவதால் என்ன பூகம்பம் நிகழப் போகிறது என்று…

ஜெயா.