இதில் என்னுடைய பர்சனல் வழிசல் இல்லை என்றாலும் மிகவும் சுவாரசியமாக எங்கள் வீட்டில் நடந்தது.
என் அப்பா கொஞ்சம், கொஞ்சம் என்ன, நிறையவே உடம்பு சரியில்லாதவர். குளிர்காலம் என்றால் டேன்ஜர் லைட்தான். ஒரு வாரத்துக்கு முன்னால், காலையில் பேயடித்தாற் போல் உட்கார்ந்து இருந்ததை பார்த்து, “என்னப்பா ஆச்சு, ரொம்ப உடம்பு சரியில்லையா” என்று கேட்க,
“அப்படி ஒன்றும் இல்லை, ஆனால் ராத்திரி ஒரு நாய் அழுது கொண்டே இருந்தது… சாதாரணமாக நாய் அழுவக் கூடாது என்பார்கள்… அப்படி அழுதால் யாராவது செத்துப் போய்விடுவாங்க… எங்கே எனக்கு தான் யமன் வந்துவிட்டானோ என்று பயமாகி போய்விட்டது” என்று புலம்பிக் கொண்டு இருந்தார்.
நாங்கள் அனைவரும் அவரை தேற்றிக் கொண்டு இருந்தோம், “யாராவது நாய் அழுவதால் செத்துப் போவார்களா? அதிலும் இந்த தெருவில் ஒரு நூறு பேராவது இருப்பார்கள். அதில் யார் சாவார்கள் என்று அந்த நாய் அழும்… உன்னை விட மோசமான நிலையில் இருப்பவருக்காக கூட அந்த நாய் அழுது இருக்கலாம்… இதெல்லாம் பலிக்காதுப்பா, எல்லாம் மூடநம்பிக்கைதான்…”
அப்பாவோ, ” இல்லம்மா உங்களுக்கு தெரியாது, முப்பது வருஷத்திற்க்கு முன்னாடி நம்ம ஊருல தெருவில இருந்த நாய் அழுது, ஒருத்தன் செத்துப் போயிட்டான், எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு… பொழுது விடிஞ்சதும் தான் உயிர் வந்தது எனக்கு.. ”
நான், “இல்லப்பா, பக்கத்துவீட்டில புது நாய் வாங்கி இருப்பாங்க, அது புது இடம் பழக்கம் இல்லாம அழுது இருக்கும், அதுக்கு போய் இவ்வளவு சீன் போடறியே அப்பா, நாய் அழுது மனுஷன் செத்த காலம் எல்லாம் மலைஏறி போச்சு…”
இரண்டு நாட்கள் கழித்து எங்க அம்மா பக்கத்து வீட்டு ஆன்ட்டியிடம் பேசிக் கொண்டு இருந்த போது, “என்னங்க, புது நாய் வாங்கி இருக்கீங்களா? ஒரு நாள் ராத்திரி எல்லாம் கத்திகிட்டு இருந்தது?… ”
“இல்லீங்க, அது எங்க பையன் தான், எங்க பேத்திக்கு நாய் மாதிரி குலைச்சு விளையாட்டு காட்டிகிட்டு இருந்தான்… ” பையன் என்று அவங்க செல்லமா சொன்னது சி.டி.ஸ் ல் குப்பை கொட்டிக் கொண்டு இருக்கும் ஒரு சக ஐ. டி தொழிலாளியைத்தான்.
பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டு, “ஹி ஹி அப்படியா… நிஜ நாய் மாதிரியே சத்தம் இருந்ததா… அதனால புதுசா நாய்தான் வாங்கி இருக்கீங்களோ என்று நினைச்சேன்…”
ஒரு பையனுடைய விளையாட்டு குலைப்பு சத்தத்தை, எங்க அப்பா எமனோட பாசக்கயிறா நினைச்சு ஒரு ராத்திரி முழுக்க பீதில இருந்ததை என்ன என்று சொல்ல…
ஜெயா.
பழைய வழிசல்கள் : ஹி ஹி வழிசல்கள் II, I
Sep 17, 2009 @ 06:43:28
இது எதுவுமே தெரியாம, நான் வேற பார்க்க வரேன்னு சொல்லி அவரோட பீதிய கெளப்பி விட்டுட்டேனே ஜெயா…
🙂
(அந்த புண்ணியவான்கிட்ட சொல்லி எல்லா நாள் காலைலயும் நரி மாதிரி சத்தம் போட சொல்லு…)
Sep 18, 2009 @ 11:46:00
nalla velai adhu nejamaana naai illa…