முதலில் படிக்க: கொட்டிவாக்கம் பீச்சில் கடை
முக்கால் வாசி சாமான்கள் சனிக்கிழமையே வாங்கி வைத்துவிட்டு இருந்தாலும் சில ஞாயிற்றுக் கிழமையன்று வாங்கி கொள்வது போல நேர்ந்தது. அந்த சாமான்களை வாங்கிக் கொண்டு, சொல்லி வைத்த இடத்திலிருந்து ஐஸ் வாங்கி அதை உடைத்து, சோடாவை அதில் போட்டு, மற்ற சாமான்களையும் காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு கொட்டிவாக்கம் பீச்சுக்கு சென்று சேர்ந்த போதே மணி ஐந்தரை. ஜங்கஷனில் போலிஸ்காரர் வேறு நின்று கொண்டு இருந்தார். அதுவரை இருந்த தைரியம் அப்படியே கொஞ்சம் காணாமல் போவது போல இருந்தது… எப்படிடா இறக்குவது என்று கால்கள் வேறு பின்னடித்தது. எந்த இடத்தில் வைப்பது என்று வேறு குழப்பம். ஏற்க்கனவே இருந்த கடைகளின் நடுவில் வைத்து விடுவதா இல்லை தனியாக ஒரு இடத்தில் வைப்பதா? புதிதாக நாம் போய் அவர்கள் நடுவில் வைத்தால் ஏதாவது சொல்லுவார்களா, தனியாக வைப்பதால் கூட்டம் வருமா என்று வேறு யோசனை.
தந்தியடித்து இருந்த எங்களுக்கு துணையாக என் அக்கா வந்தார்கள் – ஏற்க்கனவே அவர்கள் பிஸினெஸ் லைனில் இருப்பதால் தைரியமாக தடாலடியாக நிலைமையை கையில் எடுத்துக் கொண்டு, எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த இளநீர் கடைக்காரை கரெக்ட் செய்து அவர் பக்கத்தில் இடம் பிடித்தார். அவர் மூலமாகவே போலிஸ் இன்ஸ்பெக்டரிடம் கூட விஷயத்தை சொல்ல வைத்தோம். இன்ஸ்பெக்டர் எங்களிடம் நேரடியாக கேட்கவில்லை என்றாலும், அவரிடம் இன்றைக்கு ஒருநாள் மட்டும்ம் தானா? அப்படிஎன்றால் பரவாயில்லை, தினமும் என்றால் – ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டரிடம் பேச வேண்டும் (ஓ அப்ப நீங்க இன்ஸ்பெக்டர் இல்லையா? )என்று சொன்னார். கண்டும் காணாமல் நாங்கள் டிக்கியில் இருந்து சாமான்களை இறக்கி வேலையை ஆரம்பித்தோம்.
முதலில் டேபிளை ஃபிக்ஸ் செய்து, சாமான்களை எல்லாம் எடுத்து வைத்து அடுக்கி ஜுஸ் கடை என்று ஆரம்பித்தோம். போகிறவர்கள் அனைவரும் ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு போனார்களே தவிர யாரும் கிட்டே கூட வரவில்லை – பின்னே ஒரு நிறைமாத கர்ப்பினிப் பெண், ஒரு நாலு வயசு குழந்தை, ஜீன்ஸ் பேன்ட் சகிதமாக இன்னொரு பெண், ஒரு சாஃப்ட்வேர் கெட் அப் பையன் – முன்னாடி ஒரு டேபிள் அதிலே ஒரு தெர்மாகோல் டப்பா, ஜூஸ் டம்பளர்கள், நாலு டப்பர்வேர் டப்பாக்கள், சோடா பாட்டில்கள் சகிதமாக நின்றால் மக்கள் என்னதான் நினைக்க கூடும்?
தைரியமாக ஒருவர் வந்து நீங்கள் என்ன பண்ணிக் கொண்டு இருக்கின்றீர்கள் என்று கேட்பதற்க்கே பத்து நிமிடம் ஆகியது – நாங்கள் ஒரு ஜூஸ் விற்கிறோம் – பெயர் ஸ்பார்க்களர்ஸ் – புதினா மற்றும் எலுமிச்சம் சேர்த்த ஒரு புதிய வகை சோடா கூல் டிரிங்க்ஸ் – விலை இருபது ரூபாய் என கூறி முதல் போனியை செய்தோம். அதன் பின்னர் ஒன்றிரண்டாக மக்கள் வந்து வாங்கிக் கொண்டு இருந்தனர்… அகில் கையில் ஒரு மாட்டிக்கொண்டு இப்படி அப்படி ஓடிக் கொண்டு இருந்தது. எல்லோருக்கும் மூடி போட்டு ஸ்ட்ரா போட்டு டிஷ்யு பேப்பர் வைத்து தந்தான். ஆனால் யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல வில்லை – கொஞ்சம் சங்கோஜமாக தான் ஃபீல் பண்ணிக் கொண்டு இருந்தான். நடுவில் அதுவே இரண்டு ஜூஸ் குடித்துக் கொண்டு இருந்தது. போலிஸ் காரருக்கும், இளநீர் கடைக்காரருக்கும் ஒரு ஜூஸ் இலவசமாக (காக்காய் பிடிப்பதற்க்காக என்று படிக்காதீர்கள்) கொடுத்தோம்.
இப்படி அப்படியாக கடை திறந்த ஒரு மணி நேரத்தில் ஒரு 15 கப் விற்றி இருப்போம். அதற்க்குப்பறம் நான் போய் உட்கார்ந்து கொண்டேன் பார்ப்பவர்களின் பரிதாபப்பார்வையே காரணம் 🙂 என் அக்காவின் கை ஜாலத்தால் நன்றாகவே போய்க் கொண்டு இருந்தது. இன்னும் ஒரு அரை மணி நேரம் முடிந்த போது ஒரு 440 ரூபாய்க்கு விற்றிருந்தோம் – 500 ரூபாயை தொட்டவுடன் கடையை ஏறக்கட்டி விடலாம் என்று பார்த்தால் – யாரும் வாங்குகிறா மாதிரியே காணோம்… ஒரு 20 நிமிஷம் காத்திருந்திருப்போம், பொறுமை போய்க் கொண்டு இருந்தது, திடீரென்று நிறைய பேர் வந்துவிட்டனர் – ஒரு கும்பல் எட்டு பேர் கொண்டது, அப்புறம் ஒரு 4 பேர் என திரண்டு வந்து விட்டனர். ஒரு கட்டத்தில் கொண்டு போன புதினா தீர்ந்து போய் விட்டது – அத்தோடு கடையை ஏறக்கட்ட வேண்டிய நிலைமை தானாக ஏற்ப்பட்டு விட்டது. அப்படியும் வந்து கேட்டவர்கள் இருவருக்கு புதினா இல்லாமல் அட்ஜஸ்ட் செய்து போட்டுக் கொடுத்து விட்டோம். அதன் பின்னரும் கூட வந்து கேட்டவர்களுக்கு முடிந்து விட்டது என்று சொல்லும் படி ஆகிவிட்டது. குடித்தவர்களிடம் எப்படி இருந்தது என்று கேட்டதற்க்கு, நன்றாக் இருந்தது என்று தான் பதில் வந்தது – சும்மாகாட்டிக்கா இல்லை நிஜமாகவே சொன்னார்களா என்று தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
நிறைய கற்றுக் கொண்டோம் – நிறைய இடத்தில் சொதப்பினோம் – மார்கெட்டிங்கும் பிரண்டேஷனும் ரொம்பவே இம்புரூவ் பண்ண வேண்டி இருக்கின்றது என்று தெரிந்து கொண்டோம், காரை கொண்டு வந்து எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். காரிலேயே அகிலை பாராட்டிக் கொண்டு வந்தோம். “அகில் உன்னுடைய முதல் சம்பாத்தியம், வீட்டுக்கு போனவுடன் உன் பங்கை தந்து விடுகிறோம் – நீ சிட்டி சென்டரில் உனக்கு பிடித்த பொம்மையை நீயே வாங்கிக் கொள்ளலாம், சூப்பர்மா நல்லா பிஸினெஸ் பண்ணிட்டியே” என அவனை அவனுடைய வெற்றியை கொண்டாட வைத்தோம். பின்னே குழந்தை இரண்டு மணி நேரம் கால் கடுக்க (ஒரு சேர் அல்லது ஸ்டூல் கூட கொண்டு செல்லவில்லை நாங்கள்) நின்று வேலை செய்திருக்கின்றது, இது கூட சொல்லவில்லை என்றால் எப்படி. வீட்டுக்கு வந்ததும், சும்மா சேர்ந்த காசை அவனிடமே எண்ண விட்டு, அவனுக்கு என்று 200 ரூபாய் கொடுத்து விட்டோம்.
ஹைலைட்ஸ் என்ன என்றால் – கும்பல் அதிகமாக இருந்த போது அக்காவே எல்லா வேலையும் செய்து கொண்டு இருக்க, அகில் ரொம்ப சத்தமாக ” பெரியம்மா – நீங்களே எல்லா வொர்க்கும் பண்ணிடறீங்க, என்னையை பண்ணவே விட மாட்டேங்கறீங்க” என்று கம்பெளைன்ட் பண்ணினது. இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.
நல்ல அனுபவம், போட்ட காசில் பாதியை திரும்ப எடுத்து விட்டோம், இன்னும் இரண்டு வாரம் சென்றால் மீதியையும் எடுத்துவிடலாம். அகில் இன்று காலை எழுந்ததில் இருந்து அம்மா இன்னைக்கு கடை போடலாமா என்று கேட்டுக் கொண்டு இருக்கின்றது, இல்லைடா சன்டே மட்டும் தான் என்றால், இல்லம்மா இன்னைக்கும் போடலாம் என்று என்னை கன்வின்ஸ் பண்ண டிரை பண்ணிக் கொண்டு இருந்தது.
கொட்டிவாக்கம் பீச் ஹிஸ்ரியில் ஸ்பார்களர்ஸ் விற்று அழியா இடம் பெற்று விட்டோம், அதிலும் லேன்சரில் சென்று ஜூஸ் விற்றவர்கள் நாங்களாகத்தான் இருப்போம் 🙂 வந்து எங்கள் ஜூஸ் கடையில் வந்து ஜூஸ் குடித்த அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி, இந்த வாரம் முடியாதவர்கள் அடுத்த வாரம் வந்து உங்கள் ஆதரவை தருவீர்களாக.
ஜெயா.
Sep 22, 2009 @ 05:58:24
woooow!!!!!!!!!! Congrats Akhil!!!!!!!
எதிர்பார்க்காத பிரச்சனைகள், நமக்கு வராதுனு நினைச்ச தயக்கங்கள் எல்லாம் வந்தாலும், அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி கொடி நாட்டிடீங்க வாழ்த்துகள்.
அடுத்த வாரம் கூச்சப்படாம, பொறுமையிழக்காம எல்லா வேலையும் நீங்களே செய்வீங்கன்னு எதிர்பார்க்கிறேன் 🙂
//” பெரியம்மா – நீங்களே எல்லா வொர்க்கும் பண்ணிடறீங்க, என்னையை பண்ணவே விட மாட்டேங்கறீங்க” //
கலக்கறான் 🙂
Sep 22, 2009 @ 12:24:18
அருமை!!!
புதிதாக ஒரு கடை ஒரு இடத்தில் போடுவது என்றால் வரும் தயக்கங்களை மீறி கலக்கியிருக்கிறீர்கள்….
என்னென்ன கொண்டு போனீர்கள் என்று எனக்கு தெரியாது…அடுத்த முறை ஜூஸின் பெயர் எழுதிய அட்டை, விலை ரூ 20 என்று எழுதிய அட்டை எல்லாம் எடுத்துச் செல்லவும்….
நீங்கள் சொன்ன அந்தக் கூட்டணியைப் பார்த்து உண்மையிலேயே இவர்கள் விக்க வந்தவங்களா என்ற சந்தேகம் கூட ஏற்பட்டிருக்கலாம்…
உங்க ஜூஸ்ல என்னென்ன கலந்தீங்கன்னு தெரியாது!!!! ஒரு வேளை 20 ரூவா அப்படிங்கறது வாடிக்கையாளர் தளத்தை குறைச்சிருக்குதோ என்னமோ???
அந்த எளநி கடைக் காரர் தெரிஞ்சவர்னு சொல்றீங்க!!! அவர்கிட்ட உண்மையாலுமே நால்லாயிருந்துதான்னு கேளுங்க இல்லாட்டி அலுவலகத்துக்கு ஒரு நாள் கொண்டு வந்து மக்கள்கிட்ட கேளுங்க (அலுவலகத்துல நல்லாயிருக்குன்னா நல்லாயில்லைன்னு எடுத்துக்குங்க, நல்லாவேயில்லைனா நல்லாயிருக்குன்னு எடுத்துக்குங்க……)
Sep 22, 2009 @ 15:47:25
நன்றி பாசகி, வேலை பண்ணுவதற்க்கு கூச்சம் என்று இல்லை, சாதாரணமாக இருந்தால் சீன் போட்டு இருக்கலாம், இப்போது அதெல்லாம் முடியாத காரணத்தால் அடக்கி வாசிக்க வேண்டி இருக்கின்றது. குழந்தை பிறந்து ஒரு மாசம் போகட்டும், அப்போ பார்ப்பீர்கள் எங்கள் ஃபார்மை…
@ நரேஷ் : அறிவுரைக்கு நன்றி – ஆனா அட்டை மாட்டி இருந்த வரைக்கும் யாரும் வந்து விசாரிக்கலை, அட்டையை கழட்டிய பிறகுதான் மக்கள் கிட்டவே வந்தார்கள். ஜூஸ் 20 ரூபாய் வைத்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடி ஆச்சு… இல்லை என்றால் ரொம்ப கஷ்டம். அதிலும் ஒரு மக்கா சோளக்கட்டையே பத்து ரூபாய்க்கு விற்கிறது பீச்சில். விலைவாசி எல்லாம் ஏறிப்போச்சுங்க 🙂
கண்டிப்பா இன்னும் கொஞ்சம் எக்ஸ்பெரிமென்ட் பண்ணனும். நிறைய கட்டுபாடுகள் இருக்கு பீச்சில – கரண்ட் கிடையாது, மிக்ஸி எல்லாம் வச்சு ஜூஸ் போட்டுத்தர முடியாது, லைட்டும் கம்மி இருட்டினா கஷ்டம் தான்… இடவசதி ரொம்ப இல்லை… அதனால் தான் இப்படி ஒரு ஒப்புசப்பான் ஜூஸ் போல போட வேண்டி இருந்தது, இதை எல்லாம் எப்படி தாண்டி வர்றது என்பதுதான் இந்த வார அசைன்மென்ட்.
அதுவுமில்லாமல் என்னதான் அகிலுக்காக ஆர்வகோளாறில் செய்தாலும், அவன் இன்னும் வளரவேண்டும் புரிந்து கொள்வதற்க்கு. ஒரு வேளை 1 வது இல்லை 2வது படிக்கும் போது இன்னும் நன்றாக புரியும் என்று நினைக்கின்றேன், இப்போதைக்கு அவனுக்கு இது ஒரு பொழுதுபோக்காகத்தான் தெரிகிறது…
ஜெயா.
Sep 22, 2009 @ 15:55:02
//குழந்தை பிறந்து ஒரு மாசம் போகட்டும்//
oh sorry ji, I don’t know that. My heartiest wishes for normal delivery.
//இப்போதைக்கு அவனுக்கு இது ஒரு பொழுதுபோக்காகத்தான் தெரிகிறது…//
இப்போ அவனுக்கு பொழுதுபோக்கா தெரிஞ்சாலும், வளர்ந்ததுக்கப்பறம் இந்த முயற்சிகள் நிச்சயமா அவனுக்கு நிறைய தன்னம்பிக்கையை தரும். So keep rocking 🙂
Sep 22, 2009 @ 16:29:09
//அதுவுமில்லாமல் என்னதான் அகிலுக்காக ஆர்வகோளாறில் செய்தாலும், அவன் இன்னும் வளரவேண்டும் புரிந்து கொள்வதற்க்கு. ஒரு வேளை 1 வது இல்லை 2வது படிக்கும் போது இன்னும் நன்றாக புரியும் என்று நினைக்கின்றேன், இப்போதைக்கு அவனுக்கு இது ஒரு பொழுதுபோக்காகத்தான் தெரிகிறது…//
உண்மை, இந்த வயசுக்கு இது மிக அதிகம்தான்….ஆனால் இது மறைமுகமாக பல விஷயங்களை அவன் நினைவில் நிறுத்தும் என்று நம்புகிறேன்….
சோளக்கருது 10 ரூவாயா??? எங்க தெருவுல 5 ரூவாங்க….
//அட்டை மாட்டி இருந்த வரைக்கும் யாரும் வந்து விசாரிக்கலை//
எங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணலியேன்னு நினைச்சிருப்பாங்க….
Sep 23, 2009 @ 12:18:30
Nice Update.Congrats அகில்.
Sep 23, 2009 @ 13:53:27
Akhil Future’la oru Business Magnet’a varanum my hearty wishes.
Prasadh
Zoho Corp.
Sep 24, 2009 @ 06:27:20
@பாசகி: பரவாயில்லை, நீங்க வரலாறு தெரியாம இருக்கீங்க, அப்படியே பின்னாடி போய் கொஞ்சம் படிச்சீங்க என்றால் தெரிஞ்சுப்பீங்க.
@நரேஷ்: நிஜமாவே யாரும் வந்து கேட்கலை… ஒரு வேளை அது எங்க ஸ்டார்ட்டிங் டிரபிளா இல்லை அவங்க ஸ்டார்ட்டிங் டிரபிளா என்று தெரியலை.
ஆனாலும் அகில் ஆர்வமாகத்தான் இருக்கின்றான், அதனாலேயே இன்னும் கொஞ்ச நாளிக்காவது செய்து பார்க்கனும்.
@ப்ரியா, பிரசாத்: ரொம்ப நன்றி.
ஜெயா.
Sep 30, 2009 @ 09:50:56
Hey very good trial,
rombathan dilloda vela seithurukkeenga. but a doubt is how u got this idea and selecting that place. Romba kamedia parthiruppanga with jeans and lancer and all. konjam alambal panrangalonnum ninaithu iruppanga. But good platform for akil good keep it up. Gowri Manohari.
Nov 15, 2009 @ 20:34:25
மிக நல்லதொரு முயற்சி.
தளராமல் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள். (அகிலுக்கும் சேர்த்து)
Nov 16, 2009 @ 13:52:12
நன்றி அன்டெனி.
ஜெயா.