ஒரு பத்து நாட்களாக அகிலை காலையில் எழுப்பி விடுகின்றேன் – சாதாரணமாக் எழுந்திருக்கும் நேரம் ஏழு அல்லது ஏழரை – இப்போது மாறிய நேரம் ஆறு ஆறேகால்…
முதல் நாள் எழுப்பிய போது அகில் சொன்னது – “என்னதும்மா ரூமே ஒரு மாதிரி இருக்கு… இருட்டா இருக்கு… என்ன ஆச்சு இன்னைக்கு?”
அடேய், இன்னைக்குதான்டா நீ சூரியன் எழுவதற்க்கு முன்னாடி எழுந்து இருக்கின்றாய்… காட்டமான ஏழு மணி வெயிலுக்கு எழுந்து பழகி விட்டு இப்போது என்னடா என்றால் ரூம் மாறி இருக்கு டையலாக் வேற…
ஜெயா.
Sep 28, 2009 @ 13:01:37
கொட்டிவாக்கம் பீச் கடை – இப்போதான் படிச்சேன்… அவரோட முதல் சம்பளத்துல ஒரு சின்ன கிப்ட் வாங்கி ரெடியா வச்சிக்க சொல்லலாமே… புதுசா வரபோரவங்களுக்குக் கொடுக்கலாமே. சகோதரப் பாசம் வளருமே…
உன்னோட புள்ளகிட்ட சொல்லி எனக்கும் ஒரு வேலை வாங்கிக் கொடுத்துடேன் ஜெயா.
Sep 28, 2009 @ 16:02:15
கொஞ்சம் லேட் ஆனா ரொம்ப நல்ல ஐடியா கிருஷ்ணா, ஏனென்றால் நாங்க ஏற்க்கனவே அந்த காசை ஒடிசில கலர் பாக்ஸ் வாங்கி காலி பண்ணிட்டோம் 🙂
வேற ஒரு நூறு ரூபாய்க்கு கிஃப்ட் வாங்கி அகிலை ரெடி பண்ண வைக்கறேன் 🙂
ஜெயா.
Nov 10, 2009 @ 13:40:30
ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் என்ற பதிவில் இருந்து உங்களை தொடர்கிறேன். இப்போது பின்னோக்கிப் படிக்கிறேன். மிக நன்று. வாழ்த்துக்கள் ஜெயா!