கேள்வியும் பதிலும்

3 Comments

அனன்யா பாப்பா, நீ எங்கே இருந்து வந்திருக்கே?

கொட்டிவாக்கத்தில இருந்து

உனக்கு அகில் அண்ணாவை ரொம்ப பிடிக்குமா?

ஆமா ரொம்ப பிடிக்கும்

அகில் அண்ணா உன்னை ஆசையா  வைச்சு இருக்கானா?


உங்க அப்பா எங்கே போய் இருக்காரு?

ஆஸ்ட்ரேலியா

எதுக்கு போயிருக்கறாரு கண்ணா?

மனம் சம்பாதிக்க, அது மனம் இல்லைப்பா, பணம், குடும்பத்தில குழப்பதை உண்டாக்காதே

நீ பெரிசான எந்த ஸ்கூலுக்கு போகப் போற?

ஹெட்ஸ்டார்ட்

உனக்கு அந்த ஸ்கூல் புடிச்சு இருக்கா?

ஓ புடிச்சு இருக்கே…

பிறந்து ஒன்றரை மாதம் ஆன அனன்யா இவ்வளவு பதில் சொன்னா என்று நினைச்சீங்களா என்ன? முதல் கேள்வி நான் அனன்யாவை கொஞ்சுவதற்க்காக கேட்டது, பதில் அகிலுடையது, மீதி கேள்விகளை சும்மா டெவலப் பண்ண குழந்தைக்கு மவுத்பீஸாகி அகில் சொன்ன பதில்கள்தான் அவை.

ஜெயா.

Advertisements

அதிகமாகும் அன்பு…

Leave a comment

அனன்யா வந்த பிறகு அகிலின் ரியாக்ஷ்ன்களை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கின்றேன், எழுத ஆரம்பித்தால் ரொம்ப பெரியதாக போகும் போல இருக்கவே தள்ளிப் போய்க் கொண்டு இருக்கின்றது. சீக்கிரம் எழுதுகிறேன்… இப்போதைக்கு சொல்ல வந்த சின்ன விஷயம் என்ன என்றால், இரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தை தனக்கு கிடைத்துக் கொண்டு இருந்த அன்பின் அளவு குறைந்து விடும் என்று எண்ணிக் கொள்ள ஆரம்பித்து விடும். பெரியவர்கள் வேண்டுமென்றே வித்தியாசம் பாராட்ட வில்லை என்றாலும் சிறு சிறு நிகழ்ச்சிகளில் அப்படி தோன்றி விட வாய்ப்பு இருக்கின்றது.

அகில் அப்படி யோசிப்பதற்க்கு முன்னால் ப்ரோஅக்டிவாக நானே என்ன சொல்லிக் கொண்டு இருக்கின்றேன் என்றால், “அகில், பாப்பா வந்த பிறகு உன் மேல் அன்பு ரொம்ப அதிகமாகி விட்டது.  உன்னை பார்த்தாலே ஆசை ஆசையாக இருக்கின்றது… ” அதுவும் ஆசையாக வந்து மடியில் உட்கார்ந்து கொள்ளுகிறது. சாதாரணமாக திட்டு வாங்கும் குறும்புகளை கூட இப்போது எல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறேன். டி.வி பார்ப்பது அதிகமாகி இருக்கின்றது. பாப்பா வந்ததால தன்னுடைய வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லை என்று அது உணராத அளவிற்க்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை. ஒரு 60% வெற்றியும் கண்டு இருக்கின்றேன் என்று தோன்றுகிறது. ஆனால் அனனயாவிற்கு பால் கொடுக்கும் நேரங்களும், அது அழும் நேரங்களும், அதை தூங்க வைக்கும் நேரங்களையும் தவிர்க்க முடிவதில்லை, அப்போது எல்லாம் டி.வி அல்லது வீட்டில் இருக்கும் வேறு யாராவது அகிலை மேய்க்கிறார்கள்.

பாதி நேரம் அகில் பள்ளியில் கழித்து விடுவதாலும், பாதி நேரம் அனன்யா தூக்கத்தில் இருப்பதாலும் என்னுடைய வண்டி பெரிதாக ஆட்டம் காணாமல் ஓடிக் கொண்டு இருக்கிறது…

ஜெயா.

 

இதுவா? அதுவா?

3 Comments

எங்கிருந்து அகில் இரண்டு விரல் நீட்டி, இரண்டு விஷயங்களை சாய்ஸ்ஸாக வைத்து, அதில் எதையாவது தொடவைக்கும் பழக்கத்தை கற்றுக் கொண்டது என்று தெரியவில்லை, இரண்டு விரல்லிலும் அதற்கு இஷ்டமானதையே வைத்துக் கொள்ளுவது தான் ஹைலைட்.

அம்மா, இது வந்து ஸ்கூலுக்கு போகாம இருக்கறது, இது வீட்டிலேயே இருக்கறது? இதுல எது வேணும்?

இது எப்படி இருக்கு?

ஜெயா.

சொகுசின் உச்சகட்டம்

Leave a comment

அகிலுக்கு உட்கார்ந்த இடத்தில் இருந்தே வேலை வாங்குவது ஒன்றும் புதிதல்ல… அப்படிப் பார்த்தால் எனக்கே புதிதல்ல. எப்போதும் உட்கார்ந்த இடத்தில் இருந்து தண்ணீர் கேட்பது, புத்தகம் எடுத்துதர சொல்வது எல்லாம் மிகவும் சகஜம். இந்த ஆப்பரேஷன் ஆனதில் இருந்து அது எல்லாம் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. சாப்பிட்டு விட்டு, ஒரு கிண்ணம் தண்ணியில் கை கழுவுவதும் வழக்கமாகிவிட்டது. அகிலும் எப்போவாவது இப்படி கை கழுவ தண்ணீர் கேட்டு ஆளை ஏவும், கண்டு கொள்ளாமல் விட்டு விடுவேன்.

இன்று காலை அகில் மும்மரமாக டி.வி பார்த்துக் கொண்டு இருந்தது, அவசரமாக சூ சூ வேறு வந்தது போல, நான் சொன்னேன், “அகில் சூ சூ வருது பாரு, போய்ட்டு வா”

இல்லைமா, வரலை.

இல்லை அகில் வருது பாரு, போ இல்லை என்றால் டி.வி நிறுத்திடுவேன்.

சரிம்மா, ஒரு மக் எடுத்துகிட்டு வா…

எதுக்குடா?

சூ சூ போகறத்துக்கு…

அடிங்க, மரியாதையா எழுந்து ஓடிப்போயிடு…

அடப்பாவி இவன் என்னையும் மிஞ்சிட்டானே அடுத்தவங்களை ஏவறதில..

ஜெயா.

என்னதான் இருந்தாலும்..

8 Comments

அகில் ஏதாவது குறும்புத்தனம் செய்தால், முடிந்த வரை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவேன், ஆனாலும் சில சமயம் திட்டு வாங்கும். ஆனாலும் கொஞ்ச நேரத்தில் சமாதானம் ஆகி விடுவோம். சமாதானம் ஆன பிறகு, அல்லது கொஞ்ச நேரம் கழித்து நான் சொல்லுவேன், “அகில், அம்மாவிற்க்கு அகிலை ரொம்ப பிடிக்கும், ஆனா இந்த மாதிரி ஏதாவது செய்யும் போது கோபம் வந்திடும், ஆனாலும் அகில் தான் அம்மாவிற்க்கு செல்லம்.”

இன்றைக்கு அகில் என்னிடம் சொல்லியது – “அம்மா நீ அப்போ அப்போ என்னை திட்டினாலும், எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்…”

நேரமடா சாமி 🙂

ஜெயா.

ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்…

3 Comments

தலைப்பை பார்த்தவுடனே ஏதோ பெண்ணுரிமை பதிவு என்று நினைச்சுக்க வேண்டாம்.. அகிலின் தோழி ஜேனின் சந்தேகம் இது:

“அகில் பையன் தானே? அவனுக்கு தம்பிதானே பிறக்கனும், எப்படி தங்கச்சி பாப்பா பிறந்தது? நம்ம வீட்டில தானே தங்கச்சி பாப்பா பிறக்கனும்? எப்படி?”

விடை தெரிந்தவர்கள் பதில் கூறவும். குழந்தையிடம் சொல்லக்கூடியதாகவும், அது ஒத்துக் கொள்ளும் பதிலாக இருக்கவேண்டியது மிக முக்கியம் 🙂

ஜெயா.

சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளுவது…

6 Comments

அனன்யா பிறந்து ஒரு மாதம் ஆகி விட்டது. ரொம்ப தொந்தரவு இல்லை, ஆனாலும் சில நேரங்களில் அழுகை, அழ ஆரம்பித்தால் நிறுத்துவது ரொம்ப கஷ்டமாக இருக்கினந்து. (அய்யோ அப்போ பேச ஆரம்பித்தாலும் நிறுத்தாதா என்று நீங்க அலறரது கேட்குது, என்ன பண்றது? க்கூம்…. தாயைப்போல பிள்ளை என்று பழைய பழமொழி எல்லாம் கமென்ட்ல போட்டு மொக்கை போடாதீங்க)

இன்றைக்கு தரையில் கை காலை உதைத்து விளையாடிக் கொண்டு இருந்த போது தன் கையாலேயே தன்னுடை தலை முடியை பிடித்து அழ ஆரம்பித்தது. எடுத்து விட்டாலும் அடுத்த ஒரு பத்து நிமிடத்துக்கு அதையே திரும்ப செய்து கொண்டு இருந்ததை என்ன சொல்லுவது? கொஞ்ச நேரத்தில் அகிலின் போலி அழுகை சத்தம். அவனும் ஒரு கையால் தன் தலைமுடியை பிடித்து இழுத்து (வலிக்காமல்தான்) அழுவதாக பாவ்லா செய்து கொண்டு இருந்த கொடுமையை பார்த்த போது வருகிற நாட்களை பார்த்தால் பீதியாகதான் இருக்கின்றது 🙂

ஜெயா.

Older Entries