தலைப்பை பார்த்தவுடனே ஏதோ பெண்ணுரிமை பதிவு என்று நினைச்சுக்க வேண்டாம்.. அகிலின் தோழி ஜேனின் சந்தேகம் இது:
“அகில் பையன் தானே? அவனுக்கு தம்பிதானே பிறக்கனும், எப்படி தங்கச்சி பாப்பா பிறந்தது? நம்ம வீட்டில தானே தங்கச்சி பாப்பா பிறக்கனும்? எப்படி?”
விடை தெரிந்தவர்கள் பதில் கூறவும். குழந்தையிடம் சொல்லக்கூடியதாகவும், அது ஒத்துக் கொள்ளும் பதிலாக இருக்கவேண்டியது மிக முக்கியம் 🙂
ஜெயா.
Nov 10, 2009 @ 13:23:19
குழந்தையின் குறும்பு மட்டுமல்ல. தாய்க்கும், குழந்தைக்குமான ஊடலும் அழகு தான். உங்கள் பதிவு அருமை!
அப்படி இல்லடா செல்லம்… என்று ஆரம்பித்து உங்கள் உறவினர் அல்லது பக்கத்து வீட்டில் இருந்து உதாரணம் சொல்லிப் பாருங்கள். வாண்டு எதிர்க்கேள்வி கேட்டால் என்னைத் தேடாதீர்கள்
Nov 16, 2009 @ 10:13:53
ஒரே ஒரு பதில் தான் …
jenin.. நீ akhil கூட ரொம்ப சேராத …
இல்லேனா இப்டிதான் மூல வேல செய்யும் 😉
Nov 19, 2009 @ 06:57:56
Stumped!!!!!!