அகிலுக்கு உட்கார்ந்த இடத்தில் இருந்தே வேலை வாங்குவது ஒன்றும் புதிதல்ல… அப்படிப் பார்த்தால் எனக்கே புதிதல்ல. எப்போதும் உட்கார்ந்த இடத்தில் இருந்து தண்ணீர் கேட்பது, புத்தகம் எடுத்துதர சொல்வது எல்லாம் மிகவும் சகஜம். இந்த ஆப்பரேஷன் ஆனதில் இருந்து அது எல்லாம் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. சாப்பிட்டு விட்டு, ஒரு கிண்ணம் தண்ணியில் கை கழுவுவதும் வழக்கமாகிவிட்டது. அகிலும் எப்போவாவது இப்படி கை கழுவ தண்ணீர் கேட்டு ஆளை ஏவும், கண்டு கொள்ளாமல் விட்டு விடுவேன்.

இன்று காலை அகில் மும்மரமாக டி.வி பார்த்துக் கொண்டு இருந்தது, அவசரமாக சூ சூ வேறு வந்தது போல, நான் சொன்னேன், “அகில் சூ சூ வருது பாரு, போய்ட்டு வா”

இல்லைமா, வரலை.

இல்லை அகில் வருது பாரு, போ இல்லை என்றால் டி.வி நிறுத்திடுவேன்.

சரிம்மா, ஒரு மக் எடுத்துகிட்டு வா…

எதுக்குடா?

சூ சூ போகறத்துக்கு…

அடிங்க, மரியாதையா எழுந்து ஓடிப்போயிடு…

அடப்பாவி இவன் என்னையும் மிஞ்சிட்டானே அடுத்தவங்களை ஏவறதில..

ஜெயா.