ராமாயணம் புத்தகத்தை வைத்து கதை சொல்லிக் கொண்டு இருந்தேன் அகிலுக்கு.  ஒரு பக்கத்திற்க்கு ஒரு பெரிய படம், ஓரிரு வரிகளில் கதை இருக்கும். லக்ஷ்மனன் சூர்ப்பனகையின் மூக்கை அறுக்கும் பக்கம் – இந்த மாதிரி ஒரு ராக்ஷசி தொந்தரவு பண்ணிக் கொண்டே இருந்தாள், லக்ஷ்மனர் அவள் மூக்கை அறுத்து விட்டார்…

அறுக்கலையே அம்மா…

அறுத்துட்டார்டா…

பாரு மூக்கு மேல கத்திதான் வைச்சு இருக்கார். அறுக்கலை…

அடப்பாவி, கார்ட்டூன் படங்கள் பார்த்து ரொம்பத்தான் கெட்டு போயிருக்கியோ, புத்தங்களில் நகரும் படங்களை எதிர்பார்ப்பதற்க்கு…

ஜெயா.