இன்று காலையில்,

அகில் எழுந்து பல்லைத் தேய்த்துவிட்டு பிடியாஷுர் குடிக்க வா…

பேக்கிரவுண்ட் வாய்ஸ் – என் அம்மா : குழந்தை ராத்திரி கூட பல் தேய்ச்சான்டி, சூப்பர் பாய் ஆகிட்டான் அவன்.

அகில்: அம்மா, என் பல் வெள்ளையா இருக்கா பாரேன்…

அகில் போட்ட கோலை பக்காவாக உபயோகிப்பதாக எண்ணிக் கொண்டு, ஆமாம் கண்ணா சூப்பர் வெள்ளையா இருக்கு, நீதான் இப்போ எல்லாம் அழகா பல் தேய்ச்சுடறயே..

அப்போ இப்போ பல் தேய்க்காமலெயே பிடியாஷுர் குடிச்சுடட்டுமா?

ஆமா இங்கே ஜெயா என்று ஒரு புத்திசாலி இருந்தாளே, எங்கே போனா?

ஜெயா.