அகிலும் நானும் வாரக்கடைசியில போய் கடலில் குளிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறோம்… அடிக்கடி பார்த்து பார்த்து அலையின் பல்வேறு முகங்கள் எங்களுக்கு பரிச்சயமாகி விட்டது. நேற்று அலைகள் அதிகமாகவும் சீக்கிரமாகவும் வந்து கொண்டு இருந்தது.
“அகில், இன்னைக்கு என்னவோ அலைகள் அதிகமாக வருவது போல இருக்குது இல்ல?”
“அது ஒன்னுமில்லை அம்மா, இன்னைக்கு லீவு நாள் இல்லை, எல்லாரும் பீச்சுக்கு வருவாங்க, அவங்க எல்லாரும் நிறைய வர்ற அலையை பார்த்தா சந்தோஷமாகி விடுவாங்க, அவங்கள் சந்தோஷபடுத்தலாம் என்றுதான் அலைகள் அதிகமாக வருது…”
என்ன ஒரு விளக்கம்? சந்தோஷமாக அலைகளில் உள்ளே சென்று ஆடி குளித்த்தது, கொஞ்சம் பயமாக இருந்தாலும் நிறைய கூட்டம் இருக்கவே தைரியமாக நின்று கொண்டு இருந்தோம். முதலில் அலைகளை கட்டைகளை போல எண்ணி தாண்டி குதித்து கொண்டும், பின்னர் அலைகளை எதிரிகளாக்கி சண்டை போட்டு விளையாடியது. இரண்டு கொரிய சிறுவர்கள் ரொம்ப தூரம் அலைக்குள் சென்று ரசித்து விளையாடினார்கள்… சீக்கிரமாக ஸ்விம்மிங் கிளாஸில் சேர்த்து நம் குழந்தைக்கும் நன்றாக நீச்சல் அடிக்க சொல்லிக் கொடுக்கவேண்டும்…
ஜெயா.
May 07, 2010 @ 13:53:54
what a logic !!! chance illa 🙂 sooper 🙂
Beach pakkathula veedaa?
May 10, 2010 @ 06:46:10
ஆமாம் லாவன்யா, பீச்சை பார்த்த பங்களா வீடு ரேஞ்சுக்கு இல்லை என்றாலும் நினைத்தால் கிளம்பி ஒரு 5 நிமிடத்துக்குள் போய் சேரும் அளவில் 🙂
ஜெயா.