அனன்யா முதல் வார்த்தை பேசி விட்டதா என்று ஆச்சர்யபடவேண்டாம், தினம் ஒரு டிராமா நடக்கும் எங்கள் வீட்டில் அதுதான் இப்போதைக்கு பாவமான ஜீவனாக இருக்கிறது…
நேற்றைக்கு நானும் அகிலும் அடையார் ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது, பிக் பாய் என ஒரு கடையில் போர்ட் தொங்கிக் கொண்டு இருந்தது… அதை எழுத்து கூட்டிய அகில் ப இ க , ப ஆ ய் என படித்து, இரண்டாவது வார்த்தையை மட்டும் சேர்த்து பாய் என படித்தது 🙂 பொனடிக்ஸ் முறையில் பள்ளியில் சொல்லிக் கொடுப்பதால் b o y என எழுத்து கூட்டாமல் ba a ya என்று பிரித்து பாய் என படித்துக் காட்டினான். ஏற்க்கனவே பள்ளியில் படித்து இருந்த வார்த்தையாக கூட இருக்கலாம், ஆனால் நான் பார்த்து பள்ளி புத்தக சூழல் அல்லாது, அதுவே படித்த முதல் வார்த்தை என்ற காரணத்தால் அது வரலாற்றில் இடம் பிடிக்கிறது 🙂
ஜெயா.
Leave a Reply