நாமதான் அறுந்தவால், அடக்க ஒடுக்கம் மருந்துக்கும் இல்லை என்றால், நம்ம கூட வந்து சேர்ர கும்பலாவது ஒழுங்கா வந்து சேரக் கூடாதா? ஹ்ம்ம்ம்ம் வாய்ப்பே இல்லை சுத்தமா…
எங்கள் லஞ்ச் கேங் எங்கள் ஆபிஸில் பிரபலமானது. பின்னே ஒரு எட்டு பத்து பேர் ஒரு நிமிஷத்திற்க்கு ஒரு தரம் உரக்க ஊரே திரும்பி பார்க்கும் அளவிற்க்கு சிரித்துக் கொண்டு இருந்தால் எங்களை தெரியாதவர் யார் இருக்க முடியும்? தினம் எங்களுக்கு எப்படி ஒரு வம்பு கதை கிடைக்கிறது, அதை எப்படி டிஸ்கஸ் செய்கிறோம், எதற்கு சிரிக்கிறோம் என்று கண்டுபிடிக்க எங்கள் பக்கத்து டேபிளில் வந்து உட்காருபவர்கள் பலர். அவர்களை பார்த்துதான் சிரிக்கிறோமா என்று பயந்து தூர சென்று உட்காருபவர்களும் உண்டு. சாப்பிட்டுக் கொண்டே சிரிக்கிறோமா, இல்லை சிரிப்புக்கிடையில் சாப்பிடுகிறோமா என்பது எங்களுக்கே தெரியாது, எங்கள் கும்பலிலேயே யாராவது சிக்குவார்கள், இல்லையோ சூடான செய்தியை பற்றி பேசி சிரிப்பதும் உண்டு. இப்படியாக லஞ்ச் ஹாலை மட்டும் கலக்கிகொண்டு இருந்த நாங்கள், சில பல நேரங்களில் வெளியே சென்று சாப்பிடுவதும் உண்டு, பின்னே எங்களுக்கும் கருணை உள்ளம் உண்டு எப்படி ஊருக்கு தெரிய வைப்பது? வேளச்சேரியில் எங்களை போன்ற மக்களை நம்பி திறந்துள்ள பல புதிய உணவகங்கள் எப்படி வளம் கொழிப்பது?
எங்கள் கும்பலோ பக்கா நான்வெஜ், சுமார் நான் வெஜ், பக்கா வெஜ் என ஒரு கலா கலா கதம்பம் . ஒரு இடத்துக்கு கூடி செல்லுவதற்க்குள் ஒரு அரை மணி நேர நேரடி அரட்டை, ஒரு மணி நேர க்ரூப் சேட், கடைசியாக ஒரு பஞ்சாயத்து வைத்து தீர்த்துக் கொள்ளுவதற்க்குள் பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்து இருக்கும். அப்படியாக ஒரு நாள் காலை பொழுது முழுவதும் பேசி பொழுதை ஓட்டி செல்ல முடிவிடுத்தது கெபாப் கோர்ட். வேளச்சேரி 100 அடி ரோட்டில் இருக்கும் வயிற்ற்க்கு என்றா சொன்னேன், இல்லை இல்லை பர்ஸ்க்கு வஞ்சனை இல்லாமல் செர்வீஸ் செய்யும் இடம். நல்ல வெயில் நேரம் கத்திரி வறுத்து எடுத்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் எப்படி நடந்து போய் சாப்பிடுவது? நாங்களோ 7 பேர், சரி நண்பர்கள் கூட்டத்திலிருந்து ஒரு கார் உஷார் செய்து போய் விட்டு வந்துவிடலாம், எங்கள் குழுவில் ஒரு நல்ல டிரைவரும் உண்டு, சகலகலாவல்லிகளாக்கும் நாங்கள்…
கார்பார்க்கிங்கில் நின்று யாருடைய காரை எடுத்து செல்லலாம் என்று பார்த்து கொண்டு இருந்த நேரம் நண்பர் வேஷம் போட்ட ஒரு கிராதகன், இதோ நிற்க்கிறதே, இந்த காரை எடுத்து செல்வதுதானே – இன்னொரு நண்பரின் பேரை சொல்லி அவருடையதுதானே என்று சொல்ல.. சரி இதையே எடுத்து செல்லலாம் என்று முடிவு செய்தோம். பின்னர் அவருக்கு போன் செய்து உங்கள் காரை எடுத்து செல்லுகிறோம் ஒரு தகவல் (தகவல்தான், பின்னே அனுமதி எல்லாம் கேட்கமுடியுமா என்ன) சொல்லிவிட்டு எடுக்க சென்றோம்.
அதில் வேறு அலுவலக செக்கியூரிட்டியுடன் ஒரு சின்ன உரசல் (மோதலோ??) இந்த காரை எடுங்கள், அந்த கார் சாவியை கொடுங்கள் என்று. என்ன செய்வது வெளியிடம் என்றால் அசிங்கமாக திட்டு வாங்கிருக்கவேண்டியது, அலுவலகமாகிவிட்டதால் அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை… சரி என்று ஒரு மாதிரி அந்த ஸ்விஃப்ட் காரை எடுத்து அதில் டிக்கியை தவிர அனைத்து இடங்களிலும் சொருகி கொண்டு சென்றோம். மெனு கார்டை வாங்கி பார்த்து அதற்க்கு ஒரு ஆராய்ச்சி செய்து ஆர்டர் செய்து ஊர் வம்பை மென்று கொண்டு இருந்தோம். அப்படியே வந்த உணவு வகைகளை ஒரு கை பார்த்து கொண்டு இருந்தோம்.
சரி இதையா இவ்வளவு விரிவாக எழுதிக் கொண்டு இருக்கின்றீர்கள் என்று கேட்கிறீர்களா, இனிமேல் தான் வருகிறது கதையே…
மும்மரமாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது எங்கள் ட்ரைவருக்கு ஒரு போன். சரி ஏதோ தோழியிடம் பேசிக் கொண்டு இருக்கிறாள் என்று நாங்கள் கண்டு கொள்ள வில்லை… திடிரென்று என்னிடம் கொடுத்து, “நம்ம செக்கியூரிட்டி பேசுகிறார், என்னவோ கார் பற்றி சொல்லுகிறார், யார் காரையோ எடுத்து வந்துவிட்டோம் என்று சொல்லுகிறார்…” அடிப்பாவி அவர் கிட்டேயா இப்படி அதட்டி பேசிக் கொண்டு இருந்தாய்…
போனை வாங்கி பேசினால், “மேடம், நீங்கள் யார் …. காரை எடுத்து வந்துவிட்டீர்கள் போலவே…”
“இல்லையே செக்கியூரிட்டி நாங்கள் … இவரின் காரை அல்லவா எடுத்து வந்தோம்?”
“கார் நம்பர் என்ன மேடம்?”
“தெரியலையே செக்கியூரிட்டி” ஏறின அழகில் யார் கார் நம்பரை எல்லாம் பார்த்தார்கள்? எங்கள் கார் நம்பரையே சாப்பாட்டுக்கு நடுவில் கேட்டால் திரு திரு என முழிப்போமே நாங்கள்
“… மேடம் இவர் காரைதான் எடுத்து போயிருக்கிறார்கள் மேடம்…”
” ஓ …. அங்கே இருக்கிறாரா” இதுவரை சாப்பிடதெல்லாம் வயிற்றில் எங்கே போய்விட்டது? ஒரு மாதிரி காலியான மாதிரி இருக்கிறதே…
“ஆமாம் மேடம்”
“அவர்கிட்டே கொடுங்களேன்…” அடடா, பூமா தேவி பிளந்து நம்மை உள்ளே விழுங்கிக் கொள்ள கூடாதா, இந்த மாதிரி தர்மசங்கடமான சூழ்நிலைகளில்
“நாந்தான் ஜெயா பேசறேன்… சாரி ஒரு குழப்பத்தில, சின்ன கன்ஃப்யூஷன்ல (ஓ இரண்டும் ஒன்றுதானோ) யார் காரோ என்று நினைச்சுகிட்டு, உங்க காரை எடுத்துக் கிட்டு வந்துட்டோம் போல இருக்கு… பெர்மிஷன் கேட்டுதான் எடுத்தோம் (யார்கிட்டே என்று மட்டும் கேட்காதீங்க பிளீஸ்)… இங்கே வேளச்சேரி ல தான் இருக்கோம்…. இப்போவே திரும்ப கொண்டு வந்துடட்டுமா? ” அவ்வளவு கல் மனசு காரரா சார் நீங்க..
“இல்ல பரவாயில்ல, கார் நீங்கதான் எடுத்துகிட்டு போயிருக்கீங்க என்று தெரியாமதான் கொஞ்சம் குழம்பிட்டோம், மெதுவா சாப்பிட்டு முடிச்சுட்டே வாங்க” அப்பாடி இதுல எதுவும் கெட்ட வார்த்தை இருக்கறமாதிரி தெரியலையே…
போனை வைத்த பிறகுதான் பார்த்தால், வாயருகே கொண்டு சென்ற சாப்பாடு கூட யாருக்கும் உள்ளே இறங்கவில்லை என்று… அடுத்த போன் கிராதக நண்பனுக்கு, இனி மேல் என்ன மட்டு மரியாதை, கிராதக எதிரிக்கு…
ஒருநாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது… அவசியமான பாட்டு நாட்டுக்கு… மகனே உன்னை…
“ப…. ” சொல்லக்கூடாத வார்த்தைதான்
“என்னங்க…”
“உனக்கு யாருடா சொன்னா அந்த காரு …. யோடது என்று?”
“எனக்கு எப்படிங்க தெரியும், அங்கே ஒரு காரு நிக்குதே என்று சொன்னேன், ஏன் என்ன ஆச்சு…”
“நாங்க தெரியாம யார் காரையோ எடுத்துகிட்டு வந்துட்டோம்…”
“ஏங்க நான் ஒரு கிணறை காட்டி குதி என்றால் குதிச்சுடுவீங்களா? மத்த எல்லாத்துக்கும் வக்கனையா பேசுவீங்க, இப்போ மட்டும் யார் காரையோ எடுத்துகிட்டு போயிட்டு என்னாலதான் என்று சொல்லுவீங்களா? வையுங்க போனை, நான் எல்லாருக்கும் நீங்க செய்த கொடுமையை சொல்லனும்…”
இப்போ புரியுதா ஏன் நாங்க அவனை முதலிலேயே அசிங்கமாக திட்டிவிட்டோம் என்று, கிராதகன் எல்லாம் அவனிடம் பிச்சை தான் வாங்க வேண்டும் வாய் சவடால் அடிப்பதில்.
மீதி நேரம் ஏன் சாப்பாட்டில் கவனம் சென்றது.. எப்படி கார் நம்பரை பார்த்து எடுத்து இருக்க வேண்டும், எப்படி கார் மாடலை மட்டும் பார்த்து ஏமார்ந்து இருக்க கூடாது, எப்படி வெயிலில் சிவப்பு கலர் காரும் ஆரஞ்சு கலர் காரும் ஒரே மாதிரி தெரிந்தது, எப்படி இந்த மாதிரி ஒரு கிராதகனை நம்பி இருக்க கூடாது, எப்படி செக்கியூரிட்டியிடம் வாய்போர் அடித்து இருக்க கூடாது…. என அலசி பிழிந்து காய போட்டு கொண்டு இருந்தோம்.
“அப்பவே யோசிச்சேன் நான்… எப்படி … காரில் யேசு படம் தொங்கிக் கொண்டு இருந்தது என்று…”
“ஆமாம் இப்ப யோசி, அப்போ பார்த்தியே அப்பவே சொல்ல வேண்டியது தானே, கார் மாறி இருக்கு என்று?”
“எனக்கு எப்படி தெரியும் காரை மாத்தி எடுத்து இருக்கோம் என்று, அதனால தான் சொல்லலை…”
“அடியேய்…” என அனைவரும் அவள் மேல் பாய்ந்ததால் ஹோட்டலுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை என்று சர்வர் சந்தோஷப்பட்டு கொண்டார்.
சரி போனது போச்சு, ஆனது ஆச்சு… இப்போ அலுவலகத்துக்கு போய் என்ன சொல்லுவது, எப்படி அவரிடம் சொல்லுவது… எல்லோருக்கும் தெரிந்து இருக்குமே, ஊரே கூடி ஓட்டபோகிறார்களே எப்படி அவர்களை எல்லாம் சமாளிப்பது?
புலம்பி தீர்த்து, இதற்க்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை என்றான பின்னர் திரும்ப வந்து சேர்ந்தோம். முதலில் செக்கியூரிட்டியம் தீர்த்துக் கொள்ளுவோமே…
“ஸாரி செக்கியூரிட்டி, தெரியலை யார் கார் என்று, நீங்களாவது சொல்லி இருக்கலாமே” எப்படி பழியை அவர் மேல் போட்டோம் பார்த்தீங்கல்ல?
“நான் என்ன மேடம் பண்றது, … மேடம் வந்தாங்க, காரை காமிச்சு சாவி கேட்டாங்க, தெரிந்துதான் கேட்கிறார்கள் என்று கொடுத்துட்டேன்.. யார் கார் என்ன என்று எல்லாம் ஒன்றும் சொல்லலையே மேடம்…” கரக்ட்டாதான் பேசறாரோ?
“சரி, … ரொம்ப கோபபட்டாரா என்ன?”
“பின்னே என்ன மேடம், லன்சுக்கு போகும் போது இருந்த கார், திரும்ப வந்து டிபன் பாக்ஸ் வைக்கும் போது இல்லை என்றால் டென்ஷன் ஆகமாட்டாரா என்ன?” என்ன இவர் எல்லாம் கரெக்ட்டாவே பேசுகிறார்…
“இல்ல செக்கியூரிட்டி, நம்ம … காரும் இதே கலர் அவருடைது என்று நினைத்து, அவரிடம் கேட்டுதான் எடுத்துகிட்டு போனோம், ஆனால் அவர் கார் நம்பரை கேட்கவில்லை… இதுதான் என்று நினைச்சு எடுத்துகிட்டு போயிட்டோம்…” நொண்டி சாக்காவா தெரியுது?
“அது சரிதான் மேடம், அவர் வந்து, செக்கியூரிட்டி எங்கே என் கார் என்று கேட்கிறார்.. நானும் இங்கே தானே சார் இருந்தது, யாராவது அவங்க காரை எடுக்க இடம் மாற்றி வைத்திருப்பார்கள் என்று சொல்லி போய் பார்த்தேன் மேடம். கண்ணுல படலை… அப்புறம் சார் உங்க ஃப்ரண்ட்ஸ் யாராவது எடுத்து கிட்டு போய் இருப்பாங்க என்று சொன்னேன். அவரோ, நான் கார் எடுத்துகிட்டு வந்ததே என் ஃப்ரண்ட்ஸ் யாருக்கும் தெரியாது என்று சொல்லறார்.. நான் என்ன மேடம் பண்ணுவது?”
“ஏன் செக்கியூரிட்டி, அவர் எப்போதும் கார்ல வர்றதில்லையா?”
“இல்ல மேடம், அவர் இன்னைக்குதான் காரே எடுத்துகிட்டு வந்துஇருக்கார் போல, அதனாலதான் எனக்கும் தெளிவா தெரியலை யார் கார் அது என்று…” சே இதுவேறவா… இன்னைக்குதான் அவர் எடுத்து வந்திருக்கனுமா இன்னைக்குதான் நாங்க வேற வெளியே போகனுமா? ஏன் ஏன் ஏன்….
“எங்க ஆபிஸர் நம்பர் கேட்கற வரைக்கும் போயிட்டார் மேடம்… எனக்கும் பயமா போய்விட்டது… அப்புறமாதான் யார் யார் கார் சாவி வாங்கினாங்க என்று யோசிக்கும் போதுதான் …. மேடம் ஞாபகம் வந்தாங்க, போன் செய்தோம்…கார் உங்க கிட்ட இருக்கு என்று தெரிஞ்ச பிறகுதான் மூச்சு வந்தது” உங்களுக்கு வந்தது, எங்களுக்கு போச்சே, பேஸ்மென்ட் லைட்டா ஆடுதே…
“சரி செக்கியூரிட்டி, நாங்களே கொண்டு போய் கொடுத்துடறோம் சாவியை அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு, நீங்க கவலை படாதீங்க, உங்க மேல தப்பு எதுவும் இல்லை என்றும் கூட சொல்லிடறோம்…” ஆமாம் எப்போ என் மேல தப்பு இருந்தது…
பலிபீடத்துக்கு போகும் ஆட்டுகுட்டிகளை பரிதாபத்துடன் பார்ப்பது போல ஒரு பார்வை பார்த்தார். சே என்ன ஒரு உவமை… அட அட
அவர் இருக்கும் டீமிற்க்கு செல்லும் போதே வரவேற்ப்பு ஆரம்பமாகி விட்டது…
என்ன இது இப்படி பண்ணிட்டீங்க போல…
ஹி ஹி…
இங்கே இருக்கிற கெபாப் கோர்ட்டுக்கு காரா… மகாராணிங்க நடந்து போக மாட்டீங்களோ?
ஹி ஹி…
நல்ல வேளை என் காரை பின்னாடி பக்கம் நிறுத்தி வைச்சு இருந்தேன்…
ஹி ஹி… யோவ், போங்கய்யா… முடியலை…
எத்தனைநாளா போட்ட பிளானை இன்னைக்கு நடத்தி காட்டிட்டீங்க…
வேணாம், அழுதுருவோம்…
“ஸாரி …., உங்க கார் என்று தெரியாம எடுத்துகிட்டு போயிட்டோம்…”
“ஓ தெரிஞ்சு வேற எடுத்துகிட்டு போவீங்களோ…” இன்னொரு கிராதகனின் குரல்.
“சே சே பரவாயில்லங்க… காரை காணோம் என்று தான் கொஞ்சம் பதறிட்டேன்..” ரொம்ப என்று செக்க்யூரிட்டி சொன்னாரு… “நீங்கதான் எடுத்துகிட்டு போனீங்க என்று தெரிஞ்சட்டதும் ஒண்ணும் இல்லையே, பரவாயில்லை…”
மீண்டும் அரைத்த மாவே… எடுக்க நினைத்தது ஒரு கார்-எடுத்தது இன்னொருவருடையது-தப்பு எதுவுமில்லை-அனுமதி கேட்டுதான் எடுத்தோம்-தப்பான ஆளிடம்-வெயில் அதிகமாக இருந்தது-ரொம்ப நாளாக போக இருந்த ட்ரீட் அது இது…
அதற்க்குள், “… மனைவியிடம் போட்டு கொடுத்தால் என்ன ஆகும், ஒரு மகளிர் அணியையே காரில் வெளியே அழைத்து சென்று இருக்கிறார், சொந்த செலவில் ட்ரீட் கொடுப்பதற்க்கு…” அவருக்கும் எதிரிகள் இருக்கிறார்கள் போலவே…
அடப்பாவிகளா, குற்றத்தை ஒத்துக் கொள்ளலாம் என்று வந்தால், மேலும் மேலும் குற்றபத்திரிக்கை பெரிதாகும் போலவே, இடத்தை காலி செய்வோம்… ஏற்க்கனவே சொல்லி சொல்லி நைந்து போயிருந்த ஸாரியை இன்னொருதரமும் சொல்லி இடத்தை விட்டு நழுவினோம்.
அன்றைக்கு முழுவதும் பதில் சொல்லியே வாய் வலித்துவிட்டது…சே இந்த கொடுமைக்கு வெளியே போய் சாப்பிடறதையே நிறுத்திடனும்… அப்படி என்று சொல்லுவோம் என்று நினைச்சீங்களா என்ன? இங்கேதான் வருது ராவணனன் கிளைமேக்ஸ்…
இதனால் அனைவருக்கும் அறிவிக்க ப்டுவதென்ன வென்றால், இனிமேல நாங்கள் வெளியே சாப்பிட செல்லுவதாக் இல்லை என்றா, இல்லை இல்லை… வெளியே சாப்பிட சென்றால் எங்கள் சொந்த காரில் மட்டும்தான் செல்லுவோம்… இல்லை என்றால் காரின் சொந்தகாரரையும் எங்களுடன் அழைத்து சென்றுவிடுவது… அப்படியும் இல்லையா, எடுப்பது தான் எடுக்கிறோம், ஒரு ஹோண்டா சிட்டி இல்லை கரொல்லா அல்டிஸ் என்ற ஹெப் காராக எடுத்து செல்லுவது 🙂
ஜெயா.
Jul 02, 2010 @ 21:08:23
ஜெயா,
“காரின் சொந்தகாரரையும் எங்களுடன் அழைத்து சென்றுவிடுவது”
காரின் சொந்தகாரர் எதுக்கு உங்க bill க்கு pay பண்றதுக்குதானே???
இந்த blogக்கு title “கார் வைத்திருப்பவர்கள் உஷார்” னு போட்டிருக்கலாம். பொருத்தமா இருக்கும்.
உங்க Blogக்கு comment போடவே முடியல….. நாங்க யோசிக்கிற comments லாம் நீங்களே italic font ல போட்டு முடிச்சுடுரீங்க… ஆனா அது தான் blogக்கு பலமும் சேர்க்கிறது…. கலக்குங்க……
Jul 03, 2010 @ 01:02:57
முடியலை ஜெயா. சிரிச்சு சிரிச்சு தாங்கலை.
எப்படி தேடிப்பிடிச்சு உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது.
பாவம் அந்த மனுஷன். இனி ஜென்மத்துக்கும் அவரு காரை எடுத்துக்கிட்டு வரவே மாட்டாரு.
சரி யாரு அந்த துரோகி நண்பன், எப்போ நடந்ததுங்கற மேட்டரை என்கிட்ட மட்டும் சொல்லிடுங்க.
Jul 05, 2010 @ 07:02:25
Jaya..Nee கிராதகன்..கிராதகன் ..nu tituradhu…manasaku rhombha santosam-a irruku.;-))))) ..Indha post-a andha கிராதகன padika sollanam !
sari…Next treat engha polam?
Jul 05, 2010 @ 12:20:18
@முத்து: நல்ல ஐடியா… அந்த அளவிற்க்கு கொடுரமா நாங்க யோசிக்கலை, நீ ஒரு கார் வாங்கினாய் என்றால் கண்டிப்பா நாங்க அதில போறோம், உன்னையும் கூட்டிகிட்டு போறோம்.. மீதி என்ன நடக்குது என்று அங்கே போய் பார்த்துக்கறோம்…
@நந்தா: இது நடந்து ரொம்ப காலமாகுது, எழுததான் இவ்வளவு லேட் ஆகிடுச்சு… அந்த விவரம் எல்லாம் நேர்ல சொல்லறேன் 🙂
@சுகந்தி: ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவங்க மாதிரி பேசறீங்களே, நாம இது நடந்ததுக்கு அப்புறமே இரண்டு ட்ரீட் போயிட்டோம், என்பதை மறந்துட்டீங்களா என்ன?
ஜெயா.
Jul 06, 2010 @ 11:19:23
Jaya,
Nice blog and got a big smile while reading below lines
“ஏங்க நான் ஒரு கிணறை காட்டி குதி என்றால் குதிச்சுடுவீங்களா? மத்த எல்லாத்துக்கும் வக்கனையா பேசுவீங்க, இப்போ மட்டும் யார் காரையோ எடுத்துகிட்டு போயிட்டு என்னாலதான் என்று சொல்லுவீங்களா? வையுங்க போனை, நான் எல்லாருக்கும் நீங்க செய்த கொடுமையை சொல்லனும்…”
நல்ல கிராதகன்…
Jul 12, 2010 @ 23:34:43
அந்த “ப…..” யாருன்னு இதுக்கு நீங்க சொல்லியே இருக்கலாம் ஊரறிந்த ரகசியம் அது .. சரி சரி…குறைந்த பட்சம் ஆபீஸ் அறிந்த ரகசியம்
டேய் ( உங்கள் பாணியில கிராதகன் ) எப்படிடா உன்னால மட்டும் இப்படி டக்குன்னு டக்குன்னு பேச முடியுது 😉
Jul 26, 2010 @ 11:37:49
அந்த கிராதகர் பேரு ’ந’ ல ஆரம்பிக்கும்னு நினைச்சேன்…
அப்புறம் பாத்தா அது இல்லைனு தெரியுது 🙂
Aug 12, 2010 @ 10:13:16
சே சே நரேஷ், ந எல்லாம் எங்க ஆபிஸ்ல கிராதகன் லிஸ்ட்லே சேர்த்தியே இல்லை, அவரை எல்லாம் ஈஸியா தூக்கி சாப்பிடறவனுங்க இருக்கானுங்க..
ஜெயா.