பிரச்சனையை தீர்க்க…

Leave a comment

அகிலுக்கு ஹாங்காங் toysrus கடையில் நடையோ நடை என நடந்து இங்கு இல்லாத டாய்ஸாக பார்த்து வாங்கினோம். சைனீஸ் காத்தாடி, பெரிய பபுள் விடும் பாட்டில், கேஸில் செட், வேர்ட் பில்டர் என இரண்டு பை நிறைய. வாங்கும் போதே சொல்லித்தான் வாங்கி தந்தேன், அடேய், எல்லா சாமான்களையும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு. எதையும் தொலைக்கவோ இறைத்தோ போட கூடாது என்று. வாங்கும் வரை என்ன சொல்லும் குழந்தை, கண்டிப்பா அம்மா, பத்திரமா வைச்சுப்பேன் அம்மா என்று தலை மீது அடிக்காத குறையாக சத்தியம் செய்தது…

வீட்டுக்கு வந்த இரண்டாவது நாள் மொத்தம் தரையில். எடுத்து வையடா என்று கெஞ்சி, கொஞ்சி இரண்டு மணி நேரம் ஆகியும் ஒன்றும் பிரயோஜனமில்லை. உடனே அவன் பெரியம்மா என்ன செய்தாள், “சரி நீ எடுத்து வைக்காதே, நானே எடுத்து வைக்கிறேன், ஆனால் ஷெல்ஃபில் இல்ல, பரணை மேல்… மறந்துவிடு இனிமேல் உன்னுடைய பொம்மைகளை” என்று சொல்ல, அப்போதும் நகர வில்லை உதவி செய்யவோ இல்லை அவனாகவே எடுத்து வைக்கவோ… என்ன அழுத்தக்கார கட்டையாக இருக்கிறது என்று எங்களுக்கு மலைப்பு… சரி சொன்னதை நடத்திக்காட்ட வேண்டியது தான் என அவள் எடுத்து பரணை மேல் வைக்க, நான் டி.வி ரிமோட்டையும் புதிதாக வாங்கிய வீடியோ கேம்ஸையும்  எடுத்து என் பைக்குள் போட்டுக் கொண்டு ஆபிஸ்க்கு கிளம்பினேன்.

அதுவரை அமைதியாக ஊஞ்சலில் ஆடிக் கொண்டு இருந்தது, அப்போதுதான் என்ன செய்வது என்று யோசனை வந்தால் போல் ஒரு எஃப்க்ட் கொடுத்து கொண்டு இருந்தது. அப்போது அவன் பெரியம்மா, “சரி இவனுக்கு தன்னுடைய ஒரு தவறை சரி செய்து கொள்ளுவதற்க்கு ஒரு ஆப்ஷன் கொடுக்கலாம்… அகில் நீயாக எழுந்து இப்போது ஹாலில் இருக்கும் பொருட்களை ஏறக்கட்டி வைத்து உன்னுடைய சைக்கிளை துடைத்து வைத்தால் அம்மாவை டி.வி ரிமோட்டை என்னிடம் கொடுத்து விட்டு செல்ல சொல்லுவேன், நீ இந்த வேலைகளை முடித்தவுடன் டி.வி. பார்க்கலாம்” என்று சொல்லவும் அதற்க்காகவே காத்திருந்தது போல ஓடிவந்து “சரி பெரியம்மா இதோ செய்கிறேன்” என்று இதுவரை எந்த அசம்பாவிதமும் நடக்காத மாதிரி பாவனையில் சுத்தம் செய்ய ஆரம்பித்தான். நானும் ரிமோட்டை வீட்டில் வைத்துவிட்டு ஆபிஸ் சென்று விட்டேன்.

திரும்ப வீட்டுக்கு சாயங்காலம் போனவுடன் பூனைக்குட்டி மாதிரி ஓடிவந்து சாய்ந்து கொண்டு பேசிக் கொண்டு இருந்தான். இடையில் “அம்மா, வீடியோ கேம்ஸ் தாயேன், நான் எல்லாம் க்ளீன் செய்து விட்டேன்.. பெரியம்மாவே ஹேப்பி ஆகி டி.வி வைத்தாள்…”

“தரேன் அகில் அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசி சால்வ் பண்ணனும் என்று நினைக்கிறேனே..”

“என்னம்மா”

“அம்மா உனக்கு நீ சொல்லுவதை நம்பி டாய்ஸ் வாங்கிதரேன், நீ கடையில கேட்டதுக்கு எல்லாம் தலையை ஆட்டிட்டு வீட்டுககு வந்து காத்துல பறக்க விட்டுடறையே.. அப்படி பண்ணாமல் இருக்கறதுக்கு நான் என்ன பண்ணறது சொல்லு..”

“திட்டலாமா?” பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு

“திட்டறதா… அது எல்லாம் எனக்கு பிடிக்காதுப்பா…” திட்டற வார்த்தைகளை நீ சொல்லறயா? நான் சொல்லட்டும்மா?

“ம்ம்ம் அடிக்கலாமா?”

“திட்டறதே எனக்கு பிடிக்காது.. அடிக்கறது எல்லாம் சுத்தம.. நான் அடிக்க மாட்டேன்பா…” நல்லா நாலு வைச்சு வாங்கலாம் என்றுதான் தோணுது என்ன பண்ணுவது…

“சொல்லி சொல்லி பார்க்கலாமா?” வாடா என் சொகுசு மகனே

“எத்தனை தரம் தான் சொல்லறது? காலையில எவ்வளவு தரம் சொன்னோம், கேட்டியா நீ?” அப்ப்டி வாங்க சார் வழிக்கு..

அதற்க்குள்  கூட இருந்த குட்டியம்மா ஏதோ பேச முயற்சி செய்ய, நானும் அதை கொஞ்சுவதாக, “அகில், பாப்பா ஏதோ சொல்லுதுடா.. என்ன என்று கேளு..”

உடனே பாப்பா அருகில் காதை கொண்டு வைத்து… ” அம்மா இதை நாளைக்கு டிஸ்கஸ் பண்ணிக்கலாம் .. இப்போ பேச வேண்டாம் என்று சொல்லுதுமா…

அடப்பாவி என்ன ஒரு சமயோஜிதமான பதில். என்னாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை.. சிரித்து முடித்துவிட்டு, “சரி  இப்போ தருகிறேன், இனிமேல் ஒருதரம் சொல்லும் போதே எடுத்து வைத்துவிட வேண்டும் ஓகேயா?”

“ஓ ஓ ஓ ஓ கே அம்மா…

அப்புறம் வீடியோ கேம்ஸை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தது. இன்னும் பரணையில் இருக்கும் சாமான்களை கீழே இறக்காததால் திரும்ப  இரைத்து போடும் சூழ்நிலை நேரவில்லை.. அடுத்த தரம் இந்த பொறுப்பில் இருந்து எப்படி எஸ்கேப் ஆகிறது என்று பார்க்க எனக்கே ஆசையாக இருக்கிறது. 🙂

ஜெயா.

ஹாங்காங் பயண அனுபவங்கள் வந்து கொண்டே இருக்கின்றது, இது அதை விட சுவாரசியமாகவும் சின்னதாகவும் இருந்ததால் இதை எழுதிவிட்டேன்.

சொகுசின் உச்சகட்டம்

Leave a comment

அகிலுக்கு உட்கார்ந்த இடத்தில் இருந்தே வேலை வாங்குவது ஒன்றும் புதிதல்ல… அப்படிப் பார்த்தால் எனக்கே புதிதல்ல. எப்போதும் உட்கார்ந்த இடத்தில் இருந்து தண்ணீர் கேட்பது, புத்தகம் எடுத்துதர சொல்வது எல்லாம் மிகவும் சகஜம். இந்த ஆப்பரேஷன் ஆனதில் இருந்து அது எல்லாம் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. சாப்பிட்டு விட்டு, ஒரு கிண்ணம் தண்ணியில் கை கழுவுவதும் வழக்கமாகிவிட்டது. அகிலும் எப்போவாவது இப்படி கை கழுவ தண்ணீர் கேட்டு ஆளை ஏவும், கண்டு கொள்ளாமல் விட்டு விடுவேன்.

இன்று காலை அகில் மும்மரமாக டி.வி பார்த்துக் கொண்டு இருந்தது, அவசரமாக சூ சூ வேறு வந்தது போல, நான் சொன்னேன், “அகில் சூ சூ வருது பாரு, போய்ட்டு வா”

இல்லைமா, வரலை.

இல்லை அகில் வருது பாரு, போ இல்லை என்றால் டி.வி நிறுத்திடுவேன்.

சரிம்மா, ஒரு மக் எடுத்துகிட்டு வா…

எதுக்குடா?

சூ சூ போகறத்துக்கு…

அடிங்க, மரியாதையா எழுந்து ஓடிப்போயிடு…

அடப்பாவி இவன் என்னையும் மிஞ்சிட்டானே அடுத்தவங்களை ஏவறதில..

ஜெயா.

ஆப்ரிக்காட்டின் அம்மா

Leave a comment

எப்போதும் போல  தீபாவளிக்கு அலுவலகத்தில் கொடுத்த ட்ரை ஃப்ரூட்ஸ் டப்பாவை வீட்டுக் கொண்டு வந்திருந்தேன். அதில் ஆப்ரிகாட் கொட்டைகள் கூட இருந்தது. அகில் அதை பார்த்து என்ன என்று கேட்டவுடன், “இது ஆப்ரிக்காட் காய் டா”  (பழம் எப்படி இருக்கும் என்று அவனுக்கு ஏற்க்கனவே தெரியும்) நாம் பழம் சாப்பிடுவோம் இல்லையா, அதனுடைய காய், பழுப்பதற்க்கு முன்னாடி இப்படி இருக்கும், அதையும்  சாப்பிடலாம் என்று விளக்கினேன்.

அதை கேட்ட அகில் என்னை கேட்டது – “அப்போ இது ஆப்ரிக்காட்டோட அம்மாவா?” என்று…

ஜெயா.

கழுவினா போயிடுமா?

2 Comments

அகில்: அம்மா, பச்சை மிளகாயை தொட்டா கை எரியுமா?

அம்மா: ஆமாண்டா அகில்

அகில்: காம்பை பிடிச்சா கூட எரியுமா?

அம்மா: ஆமாம் அகில், ஆனா தொட்டுட்டு கையை கழுவிட்டா எரியாது… கண்ணில் வைச்சா கூட எரியாது.. அதனால கையை கழுவிடு என்ன?

அகில்: அப்போ பச்சை மிளகாயை கழுவிட்டா அது எரியாதா??

அம்மாவாகிய நானேதான்: ??????

ஜெயா.

புதிய ஜோக்…

8 Comments

அகிலுக்கு எப்போதும ஜோக்குகள் ரொம்ப பிடிக்கும். வார புத்தங்களில் வரும் ஜோக்குகளில் அவனுக்கு புரிகிற மாதிரி இருக்கின்ற ஜோக்குகளை அவனுக்கு கதைகளாக சொல்லுவேன். இப்போதைய ஜோக் :

ஒரு ராஜா இருந்தாராம், அவர் ரொம்ப சோகமாக இருந்தாராம். ஒரு ராணி இன்னொரு ராணி கிட்டே கேட்டாங்களாம் ராஜா ஏன் சோகமா இருக்கிறார் என்று. அதுக்கு இன்னொரு ராணி சொன்னாங்களாம் – புதுசா வந்து இருக்கிற ராணி மன்னரை ‘மன்னா’ என்று கூப்பிடறதக்கு பதிலா ‘அண்ணா’ கூப்பிட்டாங்களாம் …

சொன்னவுடன் அகிலுக்கு ரொம்ப சிரிப்பு வந்தது… தினமும் ஒரு முறையாவது இதை சொல்லி சிரிப்போம். புரியாமல் சிரித்தது என்று நான் மனசை தேற்றிக் கொண்டு இருக்கின்றேன்…

ஜெயா.

கட்லெட் கதை

1 Comment

குழந்தைகள் வீட்டில் இருப்பதால் நமக்கு என்ன திறமை வளருதோ இல்லையோ, அந்த நிமிஷத்தில் கொடுத்த வார்த்தையை பற்றி கதை சுத்துகின்ற திறமை நாமே வியக்குமளவிற்க்கு அதிகமாகி இருக்கும்.

இன்றைக்கு அப்படித்தான், அகிலை மதியானம் தூங்க வைக்க லஞ்சமாக சாயங்காலம் பீச்சுக்கு அழைத்துக் கொண்டு போய் கட்லெட் வாங்கிதருகிறேன் என்று சொன்னேன். அதை கேட்டவுடன், அம்மா கட்லெட் கதை சொல்லேன் என்று ஆரம்பித்தது வம்பை. சரி அப்படியே கட்டில் மேல வந்து படு சொல்லுகிறேன் என்று கோழி அமுக்குகிறார்ப் போல் அமுக்கி எடுத்துவிட்ட கதை இது:

“ஒரு ஊர்ல கட் என்று பையன் இருந்தானாம், லெட் என்று ஒரு பொண்ணு இருந்தாளாம், இரண்டு பேரும் ஒரே ஸ்கூல், ஒரே கிளாஸ். ஆனால் ரெண்டு பேரும் எப்போவும் சண்டை போட்டுப்பாங்க, இவ புக் அவன் எடுத்துடுவான், அப்புறம்ம அவனோட பேனா இவ எடுத்துடுவா… அவங்க கிளாஸ் மிஸ் சொல்லி சொல்லிப் பார்த்தாங்க, கேட்கலை, கடைசியில ரெண்டு பேர் குடுமியையும் சேர்த்து முடிச்சு போட்டுவிட்டுடாங்க.. அதில இருந்து அவங்க ரெண்டு பேரும் எங்கே போனாலும் ஒன்னாத்தான் போக வேண்டி இருந்தது, எப்போவும் ஒத்துமையா இருக்க வேண்டி வந்தது. பார்க்கறவங்க எல்லாரும் அவங்களை அப்போத்திலிருந்து கட்லெட் போகுது, கட்லெட் வருது என்று சொன்னாங்க, அதில இருந்து அவஙக் கட்லெட் ஆகிட்டாங்க…”

கதை ரொம்ப கன்வின்ஸிங்கா வந்ததாலோ என்னமோ அகிலிடம் சத்தம் காணோம்… அகிலைவிட கேட்டுக்கொண்டு இருந்த என் அக்கா ரொம்ப இம்ப்ரஸ் ஆனாங்க நம்ம இன்ஸ்டட் கதை கேட்டு.

ஜெயா.

Three special steps…

Leave a comment

In Disney channel the cartoon series of Special Agent OSO is telecast in the morning slot – the time when we have breakfast and get ready to go to school. It is a baby show – the special agent teaches the children various things in three steps, like wrapping a gift paper, arranging the tables for dinner, cleaning the garden etc., Every time the task is divided into three steps and doing that with guidance the child learns to know how to complete the task. It comes with a catchy tune and picture clues.

One day we were getting dressed up to go to citicenter and I asked akhil, “What are the three special steps to get dressed up?”

Pat came the reply: “Step 1: Find the kutti jatti, Step 2 – Put the kutti jatti, Step 3 – Go to CitiCenter”

Laughing at his reply, I was wondering, how conveniently he skipped the rest of the steps of wearing the t-shirt and pants but never missed the goal – Going to CitiCenter.

Jaya.

ஆஸ்ட்ரேலியா பயணம்

Leave a comment

நான்: அகில் நாம இரண்டு பேரும் கூட ஆஸ்ட்ரேலியா போகலாமாடா?

அகில்: எதுக்கு அம்மா?

நான்: சும்மா சுத்தி பார்த்துட்டு வரலாம் டா, அப்பாதான் அங்கே இருக்கறாரே…

அகில்: இல்லம்மா, நான் என் ஃப்ரண்ட்ஸ் கிட்ட எல்லார்கிட்டேயும் ஆஸ்ட்ரேலியா போறோம் என்று சொன்னேனா, அவங்க எல்லாரும் அன்னைக்கு கேட்டாங்க நாங்களும் வரோம் என்று, நானும் சரி என்று சொல்லிட்டேன். ஆனா இப்போ எல்லாரும் போகறது கஷ்டமா இருக்கும் இல்ல, எப்படி எல்லாரும் போக முடியும், அதனால நாமளும் போக வேண்டாம் அம்மா…

அட தர்மதாதா பிரபுவே, ஆஸ்ட்ரேலியாவிற்க்கு உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கூட்டிக்கிட்டு போகறது என்றால் என்ன என்று தெரியுமாடா? பேங்க் பேலன்ஸில் ஒரு துண்டு விழாது, ஒரு பெட்ஷீட்டே விழும்…முளைச்சு மூனு இலை விடல, அதுக்குள்ள ஃப்ரண்ட்ஸ், அதுல அவங்கள விட்டுட்டு வேற வர முடியாது என்று டையலாக்… எங்கே போய் முடியப் போகுதோ?

ஜெயா.

நரி கதை

Leave a comment

எப்போதும் தூங்குவதற்க்கு முன் அகிலுக்கு ஏதாவது கதை சொல்லுவது வழக்கம். குட்டி குழந்தைகள் கதைகள், ஏதாவது தேவதை கதைகள், சொந்த கதை சோகக்கதை என அடித்துவிடுவது உண்டு.

ஒரு நாள் நான் அகில் தூங்கும் போது வீட்டில் இல்லை – ஆகவே எனது அம்மாவிடம் “அம்மம்மா, கதை சொல்லுங்க” என்று சொல்லி இருக்கிறான். அம்மம்மாவோ “எனக்கு கதை எல்லாம் தெரியாதுடா, அம்மாவிற்க்குத்தான் தெரியும்” என்று கூற “இல்லம்மா, நரி கதை சொல்லுங்க” என்று அடம் பிடித்து இருக்கின்றான்.

அம்மம்மா – “நரியும் திராட்சை பழமும் வருமே அந்த கதையா?”

அகில் – ” இல்லம்மா, ஒரு காட்டில ஒரு நரி இருக்கும், அதுக்கு ராஜாவாகனும் என்று ரொம்ப ஆசையா இருக்கும், ஆனா யாரும் ஒத்துக்க மாட்டாங்க, அப்புறம் அது ஒரு ஊருக்கு போகும், நீல கலர் சாயக்குட்டையில விழுந்திரும், ஃபுல்லா நீலக்கலர் ஆகிடும், திரும்ப வந்தா எல்லாரும் அதை பார்த்து பயந்து அதுதான் ராஜா என்று சொல்லிடுவாஙக, அப்புறம் ஒரு நாள் மழை பெய்யும், சாயம் போயிடும், அப்போ எல்லா அனிமல்ஸும் அதை திரத்தி விட்டுடுவாஙக இல்ல, அந்த கதை… ”

அம்மம்மா – ” நீயே சொல்லிட்டியே அகில், அதுதான் கதை…”

அகில் – “இப்போ நீங்க சொல்லுங்கம்மா அந்த கதையை.. அது தான் நரிகதை..”

அம்மம்மா – ????

ஜெயா.

வயிற்றுக்குள்…

1 Comment

அகில் பெரியம்மா: ஹேய் அகில் அம்மா வயித்துக்குள்ள ஒரு பாப்பா இருக்கு, அதனால தான் அம்மா வயிறு பெருசா இருக்கு தெரியுமா உனக்கு…

அகில்: (matter of fact tone’ல்) இல்ல பெரிம்மா, வயித்துகுள்ள பாப்பா எல்லாம் இல்லை, சாப்பாடுதான் இருக்கும். மத்தியானம் சாதம் நிறைய சாப்பிட்டா, அதான் பெருசா இருக்கு…

ஜெயா.

Older Entries