ஊர் பயணம்…

1 Comment

அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்கள் இருவரின் ஊர் திண்டிவனம் அருகி இருப்பதாலும், அதிலும் ஒருவர் ஊரில் உள்ள கோவிலில் கும்பாபிஷேகம் என்பதாலும் வாரக்கடைசில் அங்கு செல்லும் பிளான் ரெடி. அகிலிடம் இரண்டு நாட்களாக பிக்னிக் பில்ட் அப் கொடுத்துக் கொண்டு இருந்தேன்…

சனிக்கிழமை சாயங்காலம் காரில் கிளம்புவதாக பிளான். திண்டிவனம் செல்லும் சாலை நன்றாக இருக்கும் என்பதால் சீக்கிரமே போய் சேர்ந்து விடலாம் என்று நான்கு மணி வாக்கில் கிளம்பினோம். நான், அகில், அகில் அப்பா (வெங்கட்), யோகி மற்றும் அவர் அம்மா. காரில் ஏறின கொஞ்ச நேரத்திலேயே பசி கிள்ள, வண்டலூரில் உள்ள சங்கீதாவில் இறங்கி லைட்டாக டிபன் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்.

இதற்க்குள்ளாகவே அகில் – அம்மா பிக்னிக் நல்லா இல்லை என்று பாட்டு பாட ஆரம்பித்தது… வேடதாங்கல் அருகில் உள்ள ஒரு மலைக் கோவிலை பார்த்துவிட்டு செல்லலாம் என்று அங்கு சென்றோம். சிறிய குன்றின் மேல் அமைந்த பெருமாள் கோவில், கூட்டம் நிறைய இல்லாமல், நன்றாக பராமரிக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்துவிட்டு கீழே இறங்குவதற்க்குள் இருட்டிவிட்டது.

போகும் வழியில் அகில் – “அம்மா எனக்கு கொட்டிவாக்கம் வீட்டில் தான் தூக்கம் வரும், யோகிமாமா வீட்டில் தூக்கம் வராது, அதனால் நாம் கொட்டிவாக்கமே போய் விடலாம்..”  என்று கூறி என் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டு இருந்தது… தூக்கம் வரலை என்றால் பரவாயில்லைடா, நாம ராத்திரி முழுவதும் விளையாடிக் கொண்டு இருக்கலாம் என்று சொல்லி கொண்டு இருந்தேன்.

திண்டிவனம் சென்று சேர்வதற்க்கு 9 மணிக்குமேல் ஆகிவிட்டது, அதனருகில் ஒரு மிகசிறிய கிராமம் – எண்ணி ஒரு இருபதே வீடுகள் – நாங்கள் போன நேரம் மின்சாரம் வேறு இல்லை. அகில் நல்ல வேளை காரிலேயே தூங்கி விட்டதால் இறக்கி வெளியேயே பாய் போட்டு படுக்க வைத்தோம். அப்படியே வெளியே தூங்கி விடலாம் என்று நாங்கள் நினைத்தால், பொட்டென்று தூறிய மழைதுளி அந்த எண்ணத்தில்  மண்ணை அள்ளிப் போட்டது. சரிதான் என்று பாயை உள்ளே போட்டு படுக்க வைத்தோம். நல்லவேளையாக நடுராத்திரியில் அழுது ரகளை செய்யவில்லை. பன்னிரண்டு மணி போல கரண்ட் வந்தது. அப்பாடா என்று தூங்கினோம்.

காலையில் எழுந்து வயலை வெங்கட்டுடன் சுற்றிப் பார்த்து வந்தது. பின்னர் அங்கே டிராக்டரில் நிலத்தை உழுவதை வேடிக்கை பார்க்க சென்றோம், டிராக்டரில் ஒரு ரவுண்ட் போய் வா என்று எவ்வளவோ சொல்லியும் மாட்டேன் என்று சாதித்து விட்டது. ஆனால் உழுத சேற்றில் இறங்கி விளையாடியது. பின்னர் பம்ப் செட்டிற்க்கு சென்று ஒரு நூறு முறை சோப்பு தேய்த்து குளித்தது. வாய்க்காலில் நீச்சல் அடிக்கிறேன் பேர்வழி என்று சும்மா படுத்துக் கொண்டே நகர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தது.

காலை டிபன் சாப்பிட்டு விட்டு, மற்றொரு தோழியின் ஊருக்கு சென்று, கும்பாபிஷேக கோவிலை ஒரு ரவுண்ட் சுற்றி விட்டு கோவில் சாப்பாட்டை நன்றாக ஒரு வெட்டு வெட்டிவிட்டு  சாயங்காலமாக கிளம்பிஊருக்கு வந்து சேர்ந்தோம்.

வரும் வழியில் அகிலிடம் பிக்னிக் எப்படியடா இருந்தது என்று கேட்டால் அலட்டிக் கொள்ளாமல் வந்தது பதில்:

“பம்ப்செட், வயல் எல்லாம் நல்லா இருந்தது, கோவில் எல்லாம் நல்லா இல்லை….”

அங்கு எடுத்த சில அகிலின் அட்டஹாச போட்டோகள்:

Walking with my friend

Walking with my friend

Swimming in the Vaaikaal

Swimming in the Vaaikaal

In the water

In the water

Swimming Attempts

Swimming Attempts

Facinated look at the tractor

Fascinated look at the tractor

Playing in the waters

Playing in the water

Enjoying the mud

Enjoying the mud

ஜெயா.

ஒழுங்கா படிக்கலை என்றால்…

1 Comment

நேற்று பொன்னேரியில் உள்ள என் சித்தியின் வீட்டுக்கு சென்று இருந்தோம். அகிலும் புது இடம் என ஜாலியாக விளையாடிக் கொண்டு இருந்தது.

என் சித்தி பையன் அவர்கள் வீட்டு மாட்டை மேயும் இடத்தில் இருந்து அழைத்துக் கொண்டு வந்து கொட்டிலில் கட்டியதை பார்த்துக் கொண்டு இருந்த அகில், அவனை பார்த்து பெரிய மனுஷ தோரணையில் சொன்னது:

“ஒழுங்கா ஸ்கூலுக்கு போகலை என்றால், இப்படித்தான் மாடு மேய்க்கனும்…”

இதற்க்கான இன்புட் எங்கே இருந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இதை படியுங்கள்.

ஜெயா

Trip to kerala

3 Comments

Fag end of last year, we went on our annual office trip to kerala. I decided to take akhil with me this year, because i thought he has grown up a bit and I can take care of him in a new place too. I was very surprised that akhil was so co-operative and well behaved all through out the trip. It was a group of 20 people, and most of them akhil already knows since he visits my office often.

And his punch dialogues were also entertainment for our gang. One of them asked akhil, “periyavanaana enna panna porre?” and akhil replied – “periyavanaaga porrene.” Do I need to explain the expression of my collegue on hearing this?? (Meaning, what will you do when you grow up older, and the answer was, i will grow up)

His constant question during our train journey was:  “thoonginaa thaan kerala vaarumaa? Naama thoongaamaye kerala pogalaame” (Why should we sleep to reach kerala?) And once he got up, he was asking me, kerala vandhuchaa, and all through the trip he was confirming whether that place was kerala.

Food was not a big problem, he had what ever we we could get. And was so glad to see milk on the second day in our trip. All the things that he would have listened only in his story time – water falls, river ( i had a tough time in explaining what is a river for him in one of our stories), forest, mountains came in reality for him in this trip. He enjoyed the waterfalls, boating, he was so glad that he wore life jacket and was able to ride on a boat – like his idol Dora. Two learnings after the trip are that he is trying to whistle putting his fingers in his mouth and starting to shake his body in tune with the kuthu songs played.

Towards the end of the trip, one of my friend said to akhil – “Tomorrow you will go back to your house and it would be boring without you, how do we meet you here after?” And akhil after a thought said “amaa office ukku vaanga.” It was four days trip and time just flew like anything. We were back to chennai central and went home and the climax was that akhil had starting trouble to mingle with people at home. My mother who was so emotional seeing him after four long days got a big bulb. She was expected a paasa scene that he will run to her and hug her, but what happened in actual was he was quiet and composed and entered the house and started to relate to her only half an hour later.

Here are few of his pictures taken during the trip.

Akhil washing his baniyan in thommanguthu water falls:

akhil-washing

Standing for a pose in veega land:

akhil-in-veegaland1

Casual pose in the bus:

akhil-smiling

Excited look at the sight of water in thommanguthu

akhil-in-water

Life jacket just like Dora:

akhil-in-life-jacket

Ayyio paavam look:

akhil-in-bus

Jaya.