இப்போதெல்லாம் அகிலை ஸ்கூலுக்கு கிளப்புவது பெரும்பாடாகி வருகின்றது. எழுப்பும் போதே கதைகள் – இன்னைக்கு போகமாட்டேன், நாளைக்கு போகிறேன். எப்போதும் ஸ்கூலை வெறுக்கிற ஆசாமி இல்லை அகில். ஆனாலும் நானும் பாப்பாவும் எப்போதும் வீட்டிலேயே இருக்கும் போது தான் மட்டும் ஏன் போகவேண்டும் என்ற எண்ணத்தால் தான் ஸ்கூலுக்கு போக அவ்வளவாக இஷ்டம் இல்லை. ஓரிரண்டு நாட்கள் அழுது ஆர்ப்பாட்டம், மித்த நாட்கள் அவ்வளவு பெரிய சீன் இல்லை, இருந்தாலும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கின்றது அகிலுக்கு.
ஏன்டா போகமாட்டேன் என்கிறாய், என்றால், பதில் – “பாப்பா ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்ச உடனே நானும் போறேன் மா. அது வரைக்கும் வீட்டிலேயே இருப்பேன்…”
நானோ, ” பாப்பா இன்னும் ஸ்கூல் போக ரொம்ப நாள் இருக்குடா, அது வரைக்கும் நீ ஸ்கூலுக்கு போகலை என்றால், உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் செக்ண்ட் ஸ்டான்டர்ட் போயிட்டு இருப்பாங்க, அப்போ நீ என்ன பண்ணுவே… இத்தனை நாள் ஸ்கூலுக்கு போகலை என்றால் ஆன்ட்டி உன்னை அவங்க கூட உட்கார வைக்க மாட்டாங்க, பாப்பா கிளாஸ்ல எல்லாரும் குட்டியா இருப்பாங்க, நீ என்ன பண்ணுவே” என்றால் பலத்த சிந்தனை தான் பதில். அப்புறம் “சரி பரவாயில்லை, நான் பாப்பாவோடயே போயிக்கிறேன்..”
இப்போதைக்கு எப்படி சமாளித்து இருக்கின்றேன் என்றால் – “அகில், பாப்பா இப்போ ரொம்ப சின்னவளா இருக்கா, கொஞ்ச டைம் வெயிட் பண்ணு, பாப்பா நடந்து, வாயை திறந்து அப்பா, அம்மா, அண்ணா என்று சொல்லட்டும், கப்பென்று கூட்டிகிட்டு ஸ்கூல்ல சேர்த்துடலாம்… இவ்வளவு சின்ன குழந்தையை ஆன்ட்டி சேர்த்துக்க் மாட்டாங்க ஸ்கூல்ல… அது வரைக்கும் நீ மட்டும் போயிட்டு வந்துடு, அப்புறம் நான் உனக்கு ஒரு சைக்கிள் வாங்கி தரேன், அதில நீயும் பாப்பாவும் போங்க. ஆன்ட்டிகிட்டே இப்போவே சொல்லி வச்சிடு, நம்ம பாப்பாவை ஸ்கூல்ல சேர்த்துக்க..”
சரி என்று சொல்லி இருக்கின்றது, அன்றொரு நாள் வேறு ஏதோ பேசிக் கொண்டு இருக்கும் போது – “அம்மா பாப்பா வாயை திறந்து பேசட்டும், ஸ்கூல்ல சேர்த்திடலாம்…” என்று அது எனக்கு ஞாபகபடுத்திக் கொண்டு இருக்கின்றது.
ஜெயா.
Nov 10, 2009 @ 13:29:53
கொடுத்து வைத்தவர்கள் அகிலும், பாப்பாவும். பெரியவர்களானதும் இந்த பதிவுகளைப் பார்த்து, பார்த்து மகிழ்வார்கள். நீங்களும் நினைவுகளை அசை போடலாம்!