போன வாரம் கடற்க்கரையில் காற்றாடி விட கிளம்பினோம். வாசகர்களின் இனிய கவனத்திற்க்கு: அது ஹாங்காங்கில் வாங்கிய காத்தாடி 🙂 ஆந்தையின் வடிவில் செய்த பிளாஸ்டிக் காற்றாடி. கூடவே நைலான் கயிறு ஒரு ஐம்பது மீட்டர், அழகிய பிளாஸ்டிக் கைப்பிடியில் சுற்றி வைத்து இருந்தது. நூல் தானாக வெளிவராமல் ஒரு லாக் வேறு. ஆக மொத்தம் ஒரு ஹைடெக் காத்தாடி என்று வைத்துக் கொள்ளுங்களேன்…
நாங்கள் போன நேரம் காற்று ரொம்பவும் குறைவாக இருந்தது.. சரி பரவாயில்லை என்று கஷ்டப்பட்டு மேலெ ஏற்றி விட்டுக் கொண்டு இருந்தோம். அகிலின் பெரியம்மா மேலே எற்றி, கொஞ்ச நேரம் நூல் விட்டுக் கொண்டு இருக்க, அகில் கேட்கிறது பெரியம்மாவிடம்,
“பெரியம்மா, கிவ் மீ தி ஆப்பரேட்டர்…”
நாங்கதான் அப்போவே சொன்னோமில்ல, அது ஹைடெக் காற்றாடி என்று 🙂
ஜெயா.
Leave a Reply