காரில் செல்லும் போது முன்னாடி உள்ள அனைத்து பட்டன்களையும் அழுத்தி அவன் அப்பாவை டென்ஷன் படுத்துவது அகிலின் முக்கிய பொழுது போக்கு.

நேற்று ஒரு கல்யாணத்திற்க்கு சென்று திரும்பும் போது, பின்னாடி அமர்ந்திருந்த என்னுடைய அம்மா, அகிலை தட்டி கூப்பிட்டு, பின்னாடி வந்து விடுடா, தூங்கிட்டே வீட்டுக்கு போய்விடலாம் என்று சொல்ல, அதப்பாக பின்னால் திரும்பி ஒரு பார்வை பார்த்து சொன்னது,

“இருங்க அம்மம்மா, கொஞ்சம் வால்தனம் பண்ணிட்டு வந்துடறேன்…”

ஜெயா.