நேற்று பொன்னேரியில் உள்ள என் சித்தியின் வீட்டுக்கு சென்று இருந்தோம். அகிலும் புது இடம் என ஜாலியாக விளையாடிக் கொண்டு இருந்தது.

என் சித்தி பையன் அவர்கள் வீட்டு மாட்டை மேயும் இடத்தில் இருந்து அழைத்துக் கொண்டு வந்து கொட்டிலில் கட்டியதை பார்த்துக் கொண்டு இருந்த அகில், அவனை பார்த்து பெரிய மனுஷ தோரணையில் சொன்னது:

“ஒழுங்கா ஸ்கூலுக்கு போகலை என்றால், இப்படித்தான் மாடு மேய்க்கனும்…”

இதற்க்கான இன்புட் எங்கே இருந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இதை படியுங்கள்.

ஜெயா